கேட்டது செல்வராகவனிடம், கிடைத்தது விக்னேஷ் சிவனிடம்: சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பி
சென்னை: என்.ஜி.கே. அப்டேட் கேட்டு கேட்டு ஓய்ந்து போன சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று கூறி தள்ளிப் போனது. ஒரு நல்ல படம் உருவாக நேரம் தேவை என்று சூர்யா ரசிகர்கள் மனதை தேற்றிக் கொண்டனர்.
படம் குறித்து ஏதாவது அப்டேட் சொல்லுமாறு தினமும் செல்வராகவனிடம் கேட்கிறார்கள்.
செல்வராகவன்
சூர்யா ரசிகர்கள் அப்டேட் கேட்டு தினமும் கெஞ்சிக் கூத்தாடுகிறார்கள். செல்வராகவனோ குட் மார்னிங் ட்வீட் போடுகிறார், தத்துவம் சொல்கிறார். ஆனால் என்.ஜி.கே. பற்றி மட்டும் எதுவும் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். அவரிடம் கெஞ்சிக் கெஞ்சி டயர்டாகிவிட்டனர் சூர்யா ரசிகர்கள்.
சூர்யா
செல்வராகவன் எதை பற்றி ட்வீட்டினாலும் என்.ஜி.கே. அப்டேட் மட்டும் கொடுக்க மாட்டார் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள் சூர்யா ரசிகர்கள்.
விக்னேஷ் சிவன்
செல்வராகவனிடம் இனி பேசி புண்ணியம் இல்லை என்று நினைத்தபோது தான் சற்றும் எதிர்பார்க்காமல் விக்னேஷ் சிவன் என்.ஜி.கே. அப்டேட் கொடுத்தார். அதாவது என்.ஜி.கே படத்தில் அவர் ஒரு பாடலை எழுதுகிறார்.
என்.ஜி.கே.
யாராவது என்.ஜி.கே. அப்டேட் சொல்லுங்களேன் என்று செல்வராகவன், தயாரிப்பாளரிடம் கேட்டும் ஒன்றும் நடக்காத நிலையில் சூர்யாவை வைத்து படம் எடுத்த விக்கி தான் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
குஷி
விக்னேஷ் சிவன் கொடுத்த அப்டேட்டை பார்த்து சூர்யா ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.
நெகிழ்ச்சி
இதற்கு தான் விக்னேஷ் சிவனை அன்பான இயக்குனர் என்பது.


Click it and Unblock the Notifications











