விரைவில் நயன்தாராவை ரகசிய திருமணம் செய்யும் விக்கி?: கவலையில் சூர்யா ரசிகர்கள்

By Siva

சென்னை: நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் ரகசிய திருமணம் செய்யப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அவர்கள் லிவ் இன் முறைப்படி வாழ்வதாகக் கூட கூறப்பட்டது.

இந்நிலையில் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில்

விரைவில்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது பற்றி வாய் திறக்காமல் கப்சிப் என்று உள்ளனர்.

பரிசு

பரிசு

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவில் அமோகமாக கொண்டாடினார் நயன்தாரா. அந்த பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி தான் சில நாட்கள் கோலிவுட்டில் அனைவரும் பேசினார்கள்.

வியப்பு

வியப்பு

விக்கிக்கு ஒரு பி.எம்.டபுள்யூ. காரை பரிசளித்து அசத்தினார் நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு வந்த வாழ்வை பாரேன் என்று கோலிவுட்டில் சிலர் வயித்தெரிச்சல் அடைந்தனர்.

சூர்யா

சூர்யா

என்னது அன்பான இயக்குனருக்கு விரைவில் ரகசிய திருமணமா? அப்போ தானா சேர்ந்த கூட்டம் படம் என்னவாகும் என்று சூர்யா ரசிகர்களுக்கு ஒரு பக்கம் கவலையாக உள்ளது.

கேரளா

கேரளா

ஏற்கனவே நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் வைத்து ரகசிய திருமணம் நடந்ததாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் திருமண பேச்சு கிளம்பியுள்ளது.

சென்னை

சென்னை

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்து சென்னையில் பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்களாம். திருமணத்திற்கு பிறகு அந்த பங்களாவில் குடியேறுவார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X