இவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறிய கனவு: விக்னேஷ் சிவன் ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video
சென்னை: தனது கனவுகளில் ஒன்று நிறைவேறியுள்ளதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் துவங்கிய விழா வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டுள்ளார்.

அவர் கேன்ஸில் நோன்பு திறந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு அவர் ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிரமில் வெளியிட்டுள்ளார். ரஹ்மானுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பது என்றாலே விக்கிக்கு தனி குஷி தான்.
மேலும் கோட், சூட் அணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வீடியோ ஒன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவரின் ஆசை நிறைவேறிவிட்டது.
விக்னேஷ் சிவன் முதன்முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











