திரும்பவும் விக்னேஷ் சிவன் கனவு நிஜமாகிடுச்சாம்.. இந்த தடவை ஹாலிவுட் லெவல்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரண்டினோவை சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

By Staff

சென்னை: பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரண்டினோவை நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவெண்டின் டரண்டினோ. பத்து படங்கள் மட்டுமே இயக்குவேன் என்ற கொள்கையுடன் படங்களை இயக்கி வருகிறார் இவர். இதுவரை ஒன்பது படங்கள் இயக்கியுள்ளார். இவரது முந்தைய 8 படங்களுமே உலகளவில் புகழ் பெற்றவை.

தற்போது தனது ஒன்பதாவது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் குவெண்டின். இப்படம் வரும் ஜூலை 26ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி டிரெண்டிங் ஆகியுள்ளது.

இந்நிலையில் கேன்ஸ் பட விழாவில் இவரை நேரில் சந்தித்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

மகிழ்ச்சி:

தனது மகிழ்ச்சியை டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அவர். அதில் குவெண்டினுடன் கை குலுக்கி, தனது பெயரைக் கூறி அறிமுகப் படுத்திக் கொண்டதாக நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மூன்று புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

வாழ்த்து:

விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ‘நீங்க எப்போ அந்த மாதிரி படம் எடுப்பீங்க' என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதே போன்று நீங்களும் வளர வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர்.

போட்டோ எங்கே?

இன்னும் சிலரோ, ‘கை குலுக்கினேன் என வார்த்தையில் சொன்னால் எப்படி, அந்த போட்டோவை போடுங்க' என ஆதாரம் கேட்டுள்ளனர். நீங்க எங்க போனாலும் உங்களை விட மாட்டோம் என்கின்றனர் இவர்கள்.

எப்போது திருமணம்:

இன்னும் சிலரோ, ‘எப்போது அஜித்தை வைத்து படம் இயக்கப் போகிறீர்கள்?, சிவகார்த்திக்கேயன் படம் என்னாச்சு?, நயனை எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள்? என கேள்வி மேல் கேள்வி கேட்டு விக்னேஷ் சிவனை துளைத்து எடுத்துள்ளனர்.

ரஹ்மான் கனவு:

ரஹ்மான் கனவு:

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானை கேன்ஸ் விழாவில் சந்தித்த போதும் இதே போன்ற டிவீட் ஒன்றை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விழாவில் அவர் பல திரையுலக ஜாம்பவான்களை சந்தித்ததையும் தனது சமூகவலைதளத்தில் படங்களாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X