பால்மெயின் டிசர்ட்.. பாலிவுட் நடிகருடன் சந்திப்பு.. பலே ஆள் தான்பா நம்ம விக்னேஷ் சிவன்!
சென்னை: தோனி, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், குஜராத்தி படம், நயன்தாராவுடன் சாமி தரிசனம் என தனது வாழ்க்கையையே செம கூலாக வாழ்ந்து வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் என அனைவரும் செம காஸ்ட்லியான Balmain டிசர்ட்டை அணிந்து போஸ் கொடுத்து மற்ற பிரபலங்களையும் ரசிகர்களையும் வாயை பிளைக்க வைத்துள்ளனர்.
ரன்பீர் கபூருடன் போட்டோ எடுக்கும் போது கண்ணை மூடிவிட்ட போட்டோவையும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார் விக்னேஷ் சிவன்.

தோனியுடன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரத்திற்காக கிரிக்கெட் வீரர் தோனியை இயக்கி இருந்தார். தனக்கு ரொம்பவே பிடிச்ச கிரிக்கெட் வீரர் தோனி என பல முறை சொல்லி உள்ள விக்னேஷ் சிவன் அவருக்கு 36 முறை ஆக்ஷன் சொன்னேன் என்றும் ஒவ்வொரு முறை சொல்லும் போதும், சின்ன பையன் விரல் விட்டு எண்ணுவதை போல எண்ணி வந்தேன் என்றும் விக்னேஷ் சிவன் சிலாகித்து இருந்தார்.

குஜராத்தி படம்
கோலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என அசத்தி வரும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக ஆண்டவன் கட்டளை படத்தை குஜராத்தி மொழியில் தயாரிக்க உள்ளார். அந்த படத்தில் நடிகை மோனல் கஜ்ஜார் நடிக்கவுள்ளார் என்றும் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார்.

காதலியுடன் காளிகாம்பாள் கோயிலில்
கடந்த வெள்ளிக்கிழமை தனது காதலி நயன்தாராவுடன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் விக்னேஷ் சிவன். முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் சில அசத்தலான புகைப்படங்களை ஷேர் செய்து அவருக்கு சூப்பராக மகளிர் தின வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

ரன்பீர் கபூருடன் சந்திப்பு
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன். தனக்கு ரொம்பவும் பிடித்தமான நடிகர் என்றும், இதுவொரு ஃபேன்பாய் மொமென்ட் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து ரன்பீர் கபூரை வைத்து புதிய விளம்பரத்தை இயக்குகிறீர்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பால்மெயின் டிசர்ட்
ரன்பீர் கபூர் வெள்ளை நிற டிசர்ட் மற்றும் கேப் அணிந்து சிம்பிளாக நிற்க அவருக்கு அருகே செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள விக்னேஷ் சிவன் அணிந்திருக்கும் பால்மெயின் டிசர்ட் பக்கம் தான் ரசிகர்களின் பார்வை திரும்பி இருக்கிறது. ரூ. 42,662 என அந்த டிசர்ட்டின் விலை இணையத்தில் உள்ளதை அறிந்த ரசிகர்கள், சமீபத்தில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து விக்னேஷ் போட்டிருப்பதை பார்த்து ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர்.

கண்களை மூடி
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் எடுத்துக் கொண்ட எந்த போட்டோவையும் வீணாக்கி விடக் கூடாது என நினைத்து அவர் அருகே கண்களை மூடியபடி நிற்கும் இன்னொரு புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி வருகிறார்.

பாலிவுட் பக்கம் போவாரா
நடிகை நயன்தாரா இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ள நிலையில், தோனி, ரன்பீர் கபூர், குஜராத்தி படம் என கவனம் செலுத்தி வரும் விக்னேஷ் சிவனும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து பாலிவுட் பக்கம் போவாரா? என்கிற கேள்வியும் போக வேண்டும் என்கிற வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











