ஆ, ஊன்னா அமெரிக்கா பறக்கும் விக்கி, நயன்தாரா: தீயாக பரவிய புகைப்படம்
Recommended Video

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது காதலியுடன் அமெரிக்காவில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது ஊர் அறிந்த விஷயம். அவர்கள் அவ்வப்போது அமெரிக்காவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

ஏதாவது விசேஷம் என்றாலும் சரி, பொழுது போக்கவும் சரி அமெரிக்காவுக்கு பறந்துவிடுகிறார்கள். தற்போதும் காதல் ஜோடி அமெரிக்கா சென்றுள்ளது.
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இன்டியோ பகுதியில் பிரபல கோச்செல்லா இசை மற்றும் கலை திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது.
அந்த இசை திருவிழாவில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ். அமெரிக்காவுக்கு எப்பொழுது சென்றாலும் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிடுகிறார் விக்கி. இதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் வயித்தெரிச்சல் அடைகிறார்கள்.


Click it and Unblock the Notifications











