காதலிக்காக ரஜினி பட டைட்டிலை வாங்கிய விக்கி.. முதன்முறையாக ‘அந்த’ கேரக்டரில் நடிக்கும் நயன்!

Recommended Video

Nayanthara movie with Vignesh Shivan

சென்னை: விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்திற்கு நெற்றிக்கண் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவின் படங்கள் சமீபகாலமாக வெற்றி பெறவில்லை. அஜித்தின் விஸ்வாசம் படமே நயன்தாராவின் கடைசி வெற்றி படமாகும். அதற்கு பிறகு வந்த மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர்காலம், சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லவ் ஆக்ஷன் டிராமா ஆகிய படங்கள் அனைத்தும் தோல்வி படங்களே.

தொடர் தோல்விகளால் செம அப்செட்டில் இருக்கிறார் நயன்தாரா. விஜய்யுடன் அவர் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளிக்கு வருகிறது. ரஜினி - நயன்தாரா காம்போவில் உருவாகி வரும் தர்பார் அடுத்த பொங்கலுக்கு தான் ரிலீசாகிறது. இந்த இரண்டு படங்களைத்தான் அவர் பெரிதும் நம்பியிருக்கிறார்.

ரவுடி பிக்சர்ஸ்

நயன்தாராவின் இந்த நிலையை உணர்ந்த அவரது காதலர் விக்னேஷ் சிவன், சொந்தமாக பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அவரை வைத்து படம் எடுக்கும் பணியில் இறங்கியுள்ளார். இந்த கம்பெனிக்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

காதல்

காதல்

ஏனென்றால் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் தான் விக்னேஷ் சிவனுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதோடு, இந்த படத்தின் போது தான் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் காரணமாகவே தங்களுடைய பட நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளனர்.

தொடங்கியது படப்பிடிப்பு

தொடங்கியது படப்பிடிப்பு

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு நெற்றிக்கண் என பெயர் வைத்துள்ளனர். 'அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த ஆண்டுக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ரஜினி படத்தலைப்பு

ரஜினி படத்தலைப்பு

நெற்றிக்கண் ஏற்கனவே ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் தலைப்பாகும். நயன்தாரா இப்படத்தில் கண் பார்வையற்றவராக நடிக்கிறார் என பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்க்கும் போதே தெரிகிறது. இதற்கு முன்னர் நானும் ரௌடிதான் படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக அவர் நடித்திருந்தார்.

திரில்லர் படம்

திரில்லர் படம்

அதேபோல், கொலையுதிர் காலம் படத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நயன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக அவர் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். இப்படமும் திரில்லர் படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X