ரொமான்டிக்காக ஈஸ்டரை கொண்டாடிய விக்னேஷ் – நயன்தாரா...வைரலாகும் ஃபோட்டோ

சென்னை : கோலிவுட்டின் மிக பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருவது டைரக்டர் விக்னேஷ் சிவன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடி தான். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு காதலிக்க துவங்கிய இவர்கள், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களின் ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ரவுடி பேபி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, இருவரும் இணைந்து பல வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்கள் தயாரித்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆனதுடன், சில படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்றுள்ளது.

ரொமான்டிக் ஈஸ்டர்

இவர்கள் அடிக்கடி தாங்கள் வெளிநாடு செல்வது, பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களின் ஃபோட்டோக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி ஈஸ்டர் கொண்டாடிய ரொமான்டிக் ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

வைரலாகும் ஃபோட்டோ

வைரலாகும் ஃபோட்டோ

இருவரும் கட்டிப்பிடித்த படி இருக்கும் அழகான ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார் விக்னேஷ். கறுப்பு நிற உடையில் இருவரும் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளனர். இந்த ஃபோட்டோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

இது போன்ற இன்னும் பல ஃபோட்டோக்களை வெளியிட வேண்டும் என பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் விக்னேஷ் சிவன் பகிர்ந்த ஃபோட்டோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிஸியான விக்கி–நயன் ஜோடி

பிஸியான விக்கி–நயன் ஜோடி

டைரக்டர் மிலிண்ட் ராவ் இயக்கும் நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். அதே சமயம் டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X