கூழாங்கல்லுக்கு விருது கிடைத்த சந்தோஷம்.. அடுத்த படத்தை அறிவித்தது விக்கி - நயனின் ரவுடி பிக்சர்ஸ்!
சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்தப்படத்தின் அறிவிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இருவரும் வெளிநாடுகளில் ஊர் சுற்றும் போட்டோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கம்.

கோவா டூர்
கடந்த ஆண்டின் பெரும்பாலான நாட்கள் கொரோனா லாக்டவுன் நடைமுறையில் இருந்ததால் விக்கி - நயன் ஜோடி வெளி நாடுகளுக்கு பெரிதாக சுற்றுலா சென்றதாக தெரியவில்லை. மாறாக கோவாவுக்கு சென்றனர். அந்த போட்டோக்கள் வைரலானது.

படங்கள் தயாரிப்பு
இதனிடையே நயனும் விக்கியும், ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். இதுவரை நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை இவர்களின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர்கள் தயாரித்த கூழாங்கல் படத்திற்கு அண்மையில் வெளிநாட்டு விருது கிடைத்தது. தற்போது செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

புதிய பட அறிவிப்பு
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

படத்தின் பெயர்
புதிய படத்திற்கு வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான விநாயக் இயக்கவுள்ளார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











