Don't Miss!
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- News
7 பேர் மட்டும் தான் தமிழர்களா? பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்!
- Finance
2 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதல்.. ஹெச்டிஎஃப்சி கொடுத்த சூப்பர் அறிவிப்பு..!
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள எல்லோரும் ஈஸியா ஏமாத்திருவங்களாம்... முட்டாள்த்தனம் இவங்ககூடவே பிறந்ததாம்...!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்... வீடியோ வெளியிட்ட விக்னேஷ் சிவன் -நயன் ஜோடி!
துபாய் : புத்தாண்டு 2022 இனிதாக துவங்கியுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளது.
பிரபலங்களும் தங்களது வாழ்த்து மழையால் ரசிகர்களை நனைய விட்டுள்ளனர்.
ஹேப்பி
நியூ
இயர்....
ரசிகர்களுக்கு
வாழ்த்து
சொன்ன
பிரபலங்கள்
இந்நிலையில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

புத்தாண்டு 2022
புத்தாண்டு 2022 இனிதாக துவங்கியுள்ள நிலையில் உலக மககள் அனைவரும் புத்தாண்டை சிறப்பாக வரவேற்று கொண்டாடி வருகின்றனர். நேற்றிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், இன்றைய தினம் கோயில்களுக்கு சென்று மக்கள் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

பிரபலங்கள் வாழ்த்து
சினிமா உள்ளிட்ட துறைகளை சார்ந்த பிரபலங்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் கோலிவுட்டின் க்யூட் ஜோடியாக விளங்கும் லிக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடியும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் வாழ்த்து
முன்னதாக நேற்றைய தினம் விக்னேஷ் வெளியிட்ட பதிவில் இந்த ஆண்டு தங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரவுடி பிக்சர்ஸ் துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே சிறப்பான வரவேற்பை கொடுத்துள்ள ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பெருமையான தருணம்
கூழாங்கல் படம் பல சர்வதேச விருதுகளுக்கு தேர்வாகி, ரேட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் விருது பெற்றதும், ஆஸ்கர் விருதுக்கு சிறந்த வெளிநாடடு திரைப்பட போட்டி பிரிவில் இடம்பெற்றுள்ளதும் ரவுடி பிக்சர்சை பெருமையடைய செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நேர்மறை விமர்சனங்கள்
மேலும் நெற்றிக்கண், ராக்கி படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவும் நேர்மறையான விமர்சனங்களும் தங்களை உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த ஆண்டில் காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் உள்ளிட்ட 4 படங்களுடன் களத்தில் இறங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொண்டாட்ட வீடியோ
இதனிடையே துபாயில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா புத்தாண்டை கொண்டாடிய வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். மேலும் 2022 ஆண்டு அமைதி, வெற்றி, மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை அனைவருக்கும் கொடுக்கும் ஆண்டாக அமையும் என்றும் கூறியுளளார்.

கடவுள் சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்
ஏனென்றால் கடவுள் தனது விருப்பத்திற்குரியவர்களை முதலில் சோதிப்பார் என்றும் ஆனால் அடுத்ததாக அவர்களுக்கு அனைத்தையும் வாரி வழங்குவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அனைவருக்கும் சோதனைகளை கொடுத்ததாகவும் அதற்கு இரண்டு மடங்காக அவர் இந்த ஆண்டில் சந்தோஷத்தை கொடுப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

இரட்டிப்பு பலன்களுக்கு காத்திருங்கள்
இந்த ஆண்டில் சிறப்பான பவன்களை எதிர்கொள்ள தயாராகுமாறும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வாழ்த்தை தன்னுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.