எப்ப கல்யாணச் சாப்பாடு? செம ரொமான்ஸ் லுக்கில் நயன்தாரா, விக்கி ஓணம் வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!

By

சென்னை: நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரொமான்ஸ் லுக்கில் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. மனசினக்கரே என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர் ஐயா மூலம் தமிழுக்கு வந்தார்.

தொடர்ந்து சந்திரமுகி, கஜினி என்று அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்துள்ள அவர், முன்னணி நடிகையாக இருக்கிறார்.

முன்னணி ஹீரோக்கள்

முன்னணி ஹீரோக்கள்

விஜய், அஜித் உள்பட தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்ட நயன்தாரா, தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாக இருக்கிறார். நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

தொடர்ந்து இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக அவ்வப்போது தகவல் பரவி வருகிறது. அதை மறுத்துள்ளனர். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதை ரசிகர்கள் வைரலாக்குவார்கள்.

தனி விமானம்

தனி விமானம்

சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணம் பற்றி கூறியிருந்த விக்னேஷ் சிவன், எப்போது காதல் போரடிக்கிறதோ, அப்போது திருமணம் செய்துகொள்வோம் என்று ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட கேரளாவுக்கு சென்றுள்ளார். இருவரும் தனி விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு சென்றதாகக் கூறப்பட்டது.

ஓணம் வாழ்த்து

ஓணம் வாழ்த்து

அவர்கள் இருவரும் விமானத்தில் இருந்து இறங்கி நடந்து செல்லும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்நிலையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்தபடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கல்யாணச் சாப்பாடு

கல்யாணச் சாப்பாடு

பலர், எப்போ சார் கல்யாணச் சாப்பாடு போடப்போறீங்க? என்று கேட்டுள்ளனர். சிலர் நயன்தாராவுக்கு ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். வேற லெவல் போட்டோஸ், கலக்குங்க நயன்தாரா என்று சிலர் கூறியுள்ளனர். இன்னொரு ரசிகர், அண்ணா, அக்காவை இன்ஸ்டாவுக்கு கூட்டிட்டு வாங்க என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X