த்ரிஷாவுடன் இணைந்து... விக்னேஷ் சிவனுடன் மீண்டும் கைகோர்க்கும் நயன்தாரா

By Manjula

சென்னை: நானும் ரவுடிதான் படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாராவுடன் இணைந்து த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விக்னேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நானும் ரவுடிதான். விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பியது.

Vignesh Shivan Next Movie

இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவனின் அடுத்த படம் பற்றிய தகவல்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்துடன் விக்னேஷ் சிவன் கைகோர்க்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏ.எம்.ரத்னம் பதிவு செய்து வைத்திருக்கும் போற போக்குல இரண்டு காதல் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் ஒரு புதிய படத்தை இயக்கப் போவதாகவும், இந்தப் படத்தில் நயன்தாராவுடன் இணைந்து த்ரிஷா நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.

விக்னேஷ் சிவன் கைவசம் உள்ள கதையும் 2 கதாநாயகிகளைப் பற்றிய கதை என்பதால் இது சாத்தியமாக வாய்ப்புகள் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விக்னேஷ் சிவன் கதையே இல்லாம படம் எடுத்தாலும், நயன்தாரா இல்லாம படம் எடுக்க மாட்டாரு போல....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X