காதல் போரடிச்சா கல்யாணம்தான்... நயனுடனான காதல் பத்தி விக்னேஷ் சிவன் பளீச்!
சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதை உண்மையாக்கும் வகையில் இருவரும் கோயில் கோயிலாக சுற்றி வருகின்றனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதல் வசப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரின் காதல் ஊரறிந்த ரகசியமாக உள்ளது. நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நயன்தாரா நடித்தபோது இருவருக்கும் இடையில் காதல் பற்றிக் கொண்டது.

காதல் புகைப்படங்கள்
இருவரும் வெளிநாடுகளிலும் உள்ளூரிலும் தொடர்ந்து வெளியில் சுற்றி வருகின்றனர். இருவரும் இணைந்துள்ள வீடியோக்கள், புகைப்படங்களையும் நாம் பார்க்க முடிகிறது. கோலிவுட்டின் இந்த அழகான ஜோடி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவக்கி பல சிறப்பான படங்களை வெளியிட்டும் தயாரித்தும் வருகின்றது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் நயன்தாராவுடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

காதல் குறித்து விக்னேஷ் சிவன்
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இவர்கள் இதற்கு தெளிவான பதிலை கூறவில்லை என்றாலும் விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசியுள்ளார்.

போர் அடிச்சா கல்யாணம்தான்
தங்கள் இருவரிடையே சிறப்பான காதல் உள்ளதாகவும் வாழ்க்கை மிகவும் அழகாக நகர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரவர் வேலைகளில் பிசியாக உள்ளதும் வாழ்க்கையை அழகாக்கியுள்ளதாகவும் தற்போது தங்களுக்குள்ள உள்ள காதல் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது திருமணம் செய்துக் கொண்டு அந்த காதலையும் கொண்டாடுவோம் என்றும் கூறியுள்ளார்.

நயன்தாரா அர்ப்பணிப்பு
மேலும் நயன்தாரா படங்களின் பிரமோஷன்களில் அதிகமாக பங்கேற்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா எப்போதுமே தன்னுடைய நடிப்பில் மிகவும் சிறப்பாக டெடிகேஷனுடன் பணியாற்றுவார் என்றும் தன்னுடைய வேலையே பேச வேண்டும் என்றும் தான் அதிகமாக பேசக்கூடாது என்ற கொள்கையை உடையவர் நயன்தாரா என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











