புல்வாமா தாக்குதல்: ஓவரா சீன் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட நயன் காதலர்!

புல்வாமா தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட பதிவால் விக்னேஷ் சிவன் மீது நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர்.

Recommended Video

ஓவரா சீன் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்ட விக்னேஷ் சிவன்- வீடியோ

சென்னை: புல்வாமா தாக்குதல் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட சமூகவலைதளப் பதிவு நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத்தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலியும், அவர்களது குடும்பத்திற்கு நிதி உதவிகளும் பல்வேறு தரப்பில் இருந்து குவிந்தவண்ணம் உள்ளன.

விக்னேஷ் சிவன் பதிவு:

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திரை பிரபலங்களும் தங்களது கண்டனங்களைத் தெரித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனும் தனது கோபத்தை பதிவு செய்யும் விதமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

கேள்வி:

கேள்வி:

அதில் அவர் தான் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, கூடவே, "ராணுவ வீரர்கள் பலி. சுடும் பயிற்சியில் 9 க்கு 6 இலக்கை சுட்டுள்ளேன், என்னை எல்லைக்கு அழைத்து செல்லுங்கள்! ராணுவத்தில் சேர்வதற்கு என்ன வழிமுறை?" எனக் கேட்டிருந்தார்.

நெட்டிசன்கள் கோபம்:

நெட்டிசன்கள் கோபம்:

ஆனால், விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் கோபமடைந்துள்ளனர். நிஜமாகவே ராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகளைச் சொன்னால் போய் அங்கு சேர்ந்து விடுவீர்களா?" எனப் பலர் காட்டமாக விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சினிமாத்தனம் வேண்டாம்:

சினிமாத்தனம் வேண்டாம்:

அதோடு, ‘இது சினிமா அல்ல. மிகவும் உணர்ச்சிகரமான இது போன்ற சமயங்களில் இப்படி சினிமாத்தனமாகப் பேசாதீர்கள். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். உண்மையிலேயே உங்களுக்கு ராணுவத்தில் சேர விருப்பம் என்றால் கூகுளில் அதற்கான வழிமுறைகள் கிடைக்கும்' என்றும் சிலர் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X