Vignesh Shivan On AK 62 - நீங்க பாருங்க ஏகே 62 படத்த கொண்டாடத்தான்போறோம் - மனம் திறந்த விக்னேஷ் சிவன்
சென்னை: Vignesh Shivan On AK 62 (ஏகே 62 படம் குறித்து விக்னேஷ் சிவன்) ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிய சூழலில் அந்தப் படத்தை அனைவரும் கொண்டாடப்போகிறோம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அஜித் தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் கூறிய கதையின் இரண்டாம் பாதி லைகாவுக்கு பிடிக்காமல் போக அந்தப் படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். இதனையடுத்து ஏகே 62வை மகிழ் திருமேனி இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார். படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது.

மனம் திறந்த விக்னேஷ் சிவன்: இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏகே 62 படம் குறித்தும், இயக்குநர் மகிழ் திருமேனி குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இயக்குநர் மகிழ்திருமேனியை எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு அட்டகாசமான இயக்கநர். பிரமாதமாக எழுதி அவர் கொடுக்கும் திரைப்படங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். நான் நேற்று வந்த ஒரு இயக்குநர்... எனக்கு பத்து வருடம் முன்பு வந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி.
இந்த வாய்ப்பு முன்பே கிடைத்திருக்க வேண்டும்: அவருக்கு பெரிய நடிகர்களோடு படம் இயக்குவதற்கான வாய்ப்பு முன்பே கிடைத்திருக்க வேண்டும். அது அவருக்கான திருப்புமுனையாக இருக்கும். அப்படித்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நேற்று வந்தோம், திடீரென முன்னால் போய்விட்டோம். மீண்டும் ஒரு நான்கு படிகள் பின்னால் வருகிறோம் அதனால் தவறே கிடையாது. அவர்கள் நான்கு படிகள் முன்பே போயிருக்க வேண்டியது. அவர்களுக்கு அந்த வாய்ப்பு இப்போது வருகிறது.
படத்தை கொண்டாடத்தான் போகிறோம்: மகிழ்திருமேனி ஒரு நல்ல படம் கொடுக்கப்போகிறார். ஒரு ரசிகனாக அதை நான் பார்த்து கொண்டாடத்தான் போகிறேன். அது எந்த ஏரியாவுக்குள் எப்படி சுற்றி வந்தாலுமே எல்லாமே சரியாகத்தான் நடக்கும். அவர் கொடுக்கவிருக்கும் நல்ல படத்தை நான் மட்டுமின்றி நாம் எல்லோருமே பயங்கரமாக கொண்டாடப்போகிறோம். திரும்பவும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். அந்த வாய்ப்பு கிடைத்தாலும் சந்தோஷம். கிடைக்காவிட்டாலும் சந்தோஷம்.
வாழ்க்கையை இப்படித்தான் பார்ப்பேன்: என் வாழ்க்கையை நான் எப்படி பார்ப்பேன் என்றால் எனக்கு எந்த வேலை கிடைத்தாலும் அதை மிகவும் சந்தோஷமாக செய்கிறேன். நான் இப்போது வேறு ஒரு படத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறேன். அந்த படத்தை மிகவும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.அது ஹிட் ஆனாலும் பிளாப் ஆனாலும் அடுத்தடுத்து போய்க் கொண்டேதான் இருக்க வேண்டும்.

எல்லாமே ஒன்றுதான்: எங்கேயுமே எதுவுமே நெகட்டிவ் என்ற ஒரு விஷயமே கிடையாது. எல்லாமே பாசிட்டிவ்தான் அப்படியே போய்க்கொண்டே இருக்க வேண்டும் வாழ்க்கையை ஜாலியாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். போடா போடி படத்தில் நான் கமிட்டானது 2007ஆம் ஆண்டு. ஷூட்டிங் போனது 2010ஆம் ஆண்டு. ரிலீஸானது 2012ஆம் ஆண்டு. முதல் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து டிசைன் ஒர்க் செய்தேன்.
அப்போதுதான் தனுஷ் அறிமுகம் கிடைத்தது. அதனையடுத்து நானும் ரௌடிதான் படம் நடந்தது. கதை சொல்ல நயனிடம் சென்றேன். அங்கு வேறு ஒரு விஷயம் நடந்தது. படம் ஹிட்டானது. அந்த தருணமும், ஏகே 62 தருணமும் ஒன்றுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











