தாலி கட்டாம மாப்பிள்ளை எழுந்து போனா அந்த பொண்ணோட நிலைமை எப்படி இருக்கும்.. விக்னேஷ் சிவன் உருக்கம்!
சென்னை: திருமண மேடையில் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் மணமகன் எழுந்து போனால் அந்த பெண்ணோட நிலைமை எப்படி இருக்கும். அப்படித்தான் ஒரு பெரிய படத்தை பண்ண காத்திருந்த எனக்கு அந்த படம் கிடைக்காமல் போனதும் இருந்தது என எல்ஐகே ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசியது பலரது மனங்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக காத்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சிக்கல்கள் உருவான நிலையில், அதையெல்லாம் சமாளித்து தற்போது படத்தை ரிலீஸ் செய்யும் இடத்திற்கு வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

சிம்புவை வைத்து போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் தான் விக்னேஷ் சிவன். சிம்பு மற்றும் நயன்தாரா பிரேக்கப் செய்து பிரிந்த நிலையில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் திருமண உறவாக நீண்டு உயிர், உலகம் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், இயக்குநராக தன்னால் வெற்றி கொடுக்க முடியவில்லையே என்கிற மன வருத்தம் விக்னேஷ் சிவனுக்கு நிறையவே இருக்கிறது.
அஜித் பட வாய்ப்பு பறிபோனது பற்றி விக்னேஷ் சிவன்: வேல்ஸ் பல்கலை கழகத்தில் நேற்று (ஏப்ரல் 7) லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏப்ரல் 6ம் தேதியே திட்டமிடப்பட்ட அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்தாகி மீண்டும் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து தனது படத்துக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்துக்கொண்டே இருப்பதை பார்த்து நொந்துப் போன விக்னேஷ் சிவன் மேடையேறி பேசும் போது அஜித் பட வாய்ப்பு பறிபோனது குறித்து வெளிப்படையாக பேசிவிட்டார்.
தாலி கட்ட வேண்டிய நேரத்தில்: ஒரு பெண்ணுக்கு திருமண மண்டபத்தில் தாலி கட்ட வேண்டிய நேரத்தில் மாப்பிள்ளை எழுந்து சென்று விட்டால் அவளின் நிலை எப்படி இருக்குமோ அதே போலத்தான் ஒரு பெரிய படத்தை பண்ண வேண்டிய நேரத்தில் அந்த படம் மிஸ் ஆகிவிட்டது என அஜித் படத்தை மிஸ் செய்தது பற்றி விக்னேஷ் சிவன் மேடையிலேயே புலம்பித் தள்ளிவிட்டார்.
மொக்கை பீஸ்: அதன் பிறகு என்னை பார்ப்பவர்கள் எல்லாம், சின்னதா ஏதாவது பண்ணு, இப்போ பெரிய படம் வேண்டாம் அப்படியெல்லாம் சொல்லும் போது, அவங்க என்ன மொக்கை பீஸா பார்த்தாங்கன்னு புரிஞ்சிக்க முடிந்தது. ஆனால், அந்த நேரத்தில் என்னை நம்பி என் கூட இத்தனை கஷ்டங்களையும் தாண்டி பிரதீப் ரங்கநாதன் டிராவல் செய்தார்.
மக்களை நம்பி காத்திருக்கிறேன்: நானும் ரவுடி தான் படம் பண்ணும் போது சென்சார் முடிந்து பலரும் படத்தை பார்த்தபோது கூட யாருமே நல்லா இருக்குன்னு பாராட்டோ, வாழ்த்தோ தெரிவிக்கவில்லை. ஆனால், தியேட்டரில் வந்து பார்க்கும் மக்கள் இந்த இடத்தில் எல்லாம் சிரிப்பார்கள், ரசிப்பார்கள் என எதிர்பார்த்ததை போலவே நடந்தது. அதே போலத்தான் வரும் ஏப்ரல் 10ம் தேதி மக்களை நம்பி காத்திருக்கிறேன். இந்த படமும் என் கதையும் அவங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் என்றார். விக்னேஷ் சிவன் பேசி முடித்ததும் சர்ப்ரைஸ் ஆக நயன்தாரா மேடைக்கு வந்து அவரை கட்டியணைத்து தேற்றினார்.


Click it and Unblock the Notifications











