அந்த 7க்கு முன்னாடி.. எந்த 11 வந்தாலும் நிக்காது.. தோனிக்காக விக்னேஷ் சிவன் சூப்பர் கவிதை!

சென்னை: 'தல' தோனியின் தீவிர ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவன், தோனியின் ஓய்வை அடுத்து சூப்பரான கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

Recommended Video

Dhoni retirement : Dhoni’s records in international cricket

என்னடா? எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இனி தான் விளையாட மாட்டேன் என ஓய்வை அறிவித்துள்ளாரே..

இந்திய பிரபலங்கள் பலரும் அதற்கு வரிசையாக தங்களின் ரியாக்‌ஷனை தெரிவித்து வராங்களே..

ஆனால், தோனியின் தீவிர ரசிகரான விக்னேஷ் சிவன் ஏதும் சொல்லலையே என பார்த்தால், தற்போது அருமையான ஒரு ஆங்கில கவிதை ஒன்றை எழுதி தோனி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

தோனி ரசிகர்

தோனி ரசிகர்

'தல' தோனியின் தீவிர ரசிகர் இயக்குநர் விக்னேஷ் சிவன், என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மஞ்சள் ஜெர்சியில் ஆடினாலும், சரி, ப்ளூ ஜெர்ஸி அணிந்து கொண்டு இந்தியாவிற்காக ஆடினாலும், சரி, தோனி விளையாடும் மேட்ச்களை மிஸ் பண்ணாமல் பார்ப்பவர் நம்ம நானும் ரவுடி தான் இயக்குநர்.

வாழ்நாள் கனவு

வாழ்நாள் கனவு

கடந்த 2018ம் ஆண்டு தனது வாழ்நாள் கனவு நினைவானதாக தோனியுடன் சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டு இருந்தார். வெற்றி, தோல்வி எது வந்தாலும், ஒரே நிலையுடன் தனது அணியை கையாளும் திறமை கொண்ட கேப்டன் கூல், நம்ம நாட்டையும் ஒரு நாள் ஆள வேண்டும் என்றும் அவருக்கு சரியான நிர்வாகத் திறன் உள்ளது என்றும் கூறி உள்ளார்.

ஆங்கில கவிதை

ஆங்கில கவிதை

இந்நிலையில், தோனியின் ஓய்வு குறித்து விக்னேஷ் சிவன் எந்த ஒரு பதிவும் போடவில்லையே என நினைத்து இருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து கொடுக்கும் விதமாக தோனி குறித்த ஒரு அழகான அற்புதமான ஆங்கில கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார் நம்ம பாடலாசிரியர் விக்னேஷ் சிவன்.

அந்த 7க்கு முன்னாடி

அந்த 7க்கு முன்னாடி

டியர் மகேந்திர சிங்கு. நீங்கதான் எப்போதுமே கிங்!

அந்த 7க்கு முன்னாடி எந்த 11 வந்தாலும் நிக்காது!

டியர் கேப்டன் கூல்.. அமைதிக்கு நீங்க தான் ஸ்கூலு!

டியர் எம்.எஸ்.. உங்களை இனிமே நாங்க ரொம்ப பண்ணுவோம் மிஸ்!

டியர் மாஹி பாய்.. நீல சொக்காக்குத்தான் சொல்லிருக்கீங்க பாய்..

மஞ்ச சொக்காக்கு எப்பதுமே ஹாய் தான்!

டியர் தோனி.. உங்களுக்காக காத்திருக்கு சூப்பர் ஜர்னி!

(தமிழாக்கம் சும்மா ஒரு ட்ரை)

ரசிகர்கள் பாராட்டு

ரசிகர்கள் பாராட்டு

லாக்டவுனுக்கு பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை உருவாக்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இயக்குநர் விக்னேஷ் சிவன், தோனிக்காக தற்போது எழுதி வெளியிட்டுள்ள இந்த அருமையான கவிதையை பார்த்த தோனி ரசிகர்கள், செம சூப்பரா இருக்கு பாஸ் என பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X