வைரலாகும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வீடியோ.. இது ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் பாண்டிவுட்!
சென்னை: நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது நயன்தாராவுக்கு சீன் சொல்லி தரும் வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரெளடி தான் படம் விக்னேஷ் சிவனுக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

தொடர் சொதப்பல்
நானும் ரெளடி தான் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்தி, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஆனால், அந்த படம் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்படங்கள் ஏதும் இயக்க முடியாமல் தவித்து வருகிறார்.

கொரோனாவால் வந்த பாதிப்பு
கடந்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு, தனது அடுத்த படமான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க தொடங்கினார் விக்னேஷ் சிவன். ஆனால், உலகத்தையே மிரட்டி வந்த கொரோனா பாதிப்பு, இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தியதால், விக்னேஷ் சிவனின் அடுத்த பட வேலைகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன.

ரொமான்டிக் லாக்டவுன்
ஆனாலும், இந்த லாக்டவுன் விக்னேஷ் சிவனுக்கு அத்தனை கசப்பான ஒன்றாக அமையாமல், ரொமான்டிக் லாக்டவுனாகவே மாறியிருக்கிறது குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறார்.

பாண்டிவுட்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஷூட்டிங்கின் நடுவே நடிகை நயன்தாராவுக்கு அடுத்த காட்சிக்கான ஆலோசனைகளை ஈடுபட்ட போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் பாண்டிவுட் என கேப்ஷனும் கொடுத்திருக்கிறார்.

முதல் நாள் ஷூட்டிங்
ஷூட்டிங் நாட்களை ரொம்ப மிஸ் செய்யும் நம்ம அன்பான இயக்குநர், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியுடன் முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, சீக்கிரம் கொரோனா பிரச்சனை முடிந்து மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கை நடத்தணும் என வேண்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











