தனுஷை சீண்டிய விக்னேஷ் சிவன்?.. புருஷன் பொண்டாட்டிக்கு இதே வேலையா போச்சு.. கடுப்பான ஃபேன்ஸ்!

சென்னை: நடிகையின் நயன்தாரா தனது 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி இணையத்தையே தெறிக்க விட்டனர். நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன், விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அந்தப் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனுஷை சீண்டும் வகையில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அது நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருவரும் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக அனைவரும் ஆச்சரியப்படும் அளவில் நடந்தது. விக்னேஷ் சிவன், நயன்தாரா இவர்களின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு, Nayanthara: Beyond The Fairy Tale என்ற பெயரில் வெளியானது.

Nayanthara Vignesh Shivan Dhanush
Photo Credit:

நயன்தாரா ஆவணப்படம்: இந்த ஆவணப்படத்தில் "நானும் ரவுடிதான்" படத்தின் பாடலை தங்களது வீடியோவில் பயன்படுத்த தயாரிப்பாளர் தனுஷிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், அவர் தாமதித்து வந்ததன் காரணமாகவே வீடியோவை வெளியிடமுடியாமல் போனது என்றும், 3 விநாடி காட்சியை ஆவணத்தில் பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ரூ 10 கோடி கேட்டதாக கூறி நயன்தாரா, கோபம் ஆன நயன்தாரா அறிக்கை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையின் ஆரம்பத்தில் தனுஷ் தனது அறிக்கையில் பயன்படுத்துவது போல "ஓம் நமச்சிவாயா" என குறிப்பிட்டு நானும் ரவுடிதான்' படத்துக்கு எதிரான தனுஷின் கொடும் சொற்களை தன்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது என்றும் அதனால், ஏற்பட்ட காயம் என்றென்றும் ஆறாது என்றும் நயன்தாரா கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எதற்கு இந்த வேலை: இதுதொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு 9கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார். அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், தனுஷை சீண்டும் வகையில், தனுஷ் அடிக்கடி மேடையில் பயன்படுத்தும் வார்த்தையை அதாவது "எண்ணம் போல் வாழ்க்கை" என்பதை பயன்படுத்தி அவரை வெறுப்பேத்தி உள்ளார். இதைப்பார்த்த தனுஷின் ரசிகர்கள், புருஷன் பொண்டாட்டிக்கும் தனுஷை வம்பு இழுப்பதே வேலையாக போய்விட்டது. தனுஷ், உங்களை பற்றி எந்த இடத்திலும் விமர்சனம் செய்யாத நிலையில் எதற்காக தனுஷை சீண்டுகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X