290 பாயிண்டுகள் வித்தியாசத்தில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா: வைரல் வீடியோ
சென்னை: ஷப்பா, ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே இந்த விக்னேஷ் சிவன் அலம்பல் தாங்க முடியல சாமி.
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பது ஊர், உலகம் அறிந்த விஷயம். சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ண சொன்னால் இந்த காதல் ஜோடியோ செல்ஃபி மேல் செல்ஃபி எடுத்து ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறது.
இதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் கடுப்பாகி விக்கிக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீடியோ
இப்ப தான் பொற்கோவில் புகைப்படங்களை வெளியிட்டார். அதற்குள் தானும், நயன்தாராவும் விளையாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். விளையாட்டில் விக்கி நயன்தாராவிடம் தோற்றது தனிக் கதை.

சிங்கிள்ஸ்
யோவ், அன்பான இயக்குனரே உங்களுக்கு செட்டாச்சு என்பதற்காக இப்படி செல்ஃபி, வீடியோ என்று வரிசையாக எதையாவது வெளியிட்டு எங்களை கடுப்பேற்றுவதையே ஒரு வேலையாக வைத்திருக்கிறீரா என்று சிங்கிள்ஸ் கொந்தளித்துள்ளனர்.

சாபம்
வேண்டாம் விக்னேஷ் சிவன் இத்துடன் நிறுத்திக்கோங்க. சிங்கிள்ஸ் சாபம் உங்களை சும்மா விடாது. இப்படியே தொடர்ந்து கடுப்பேற்றினால் நன்றாக இருக்காது என்று விக்கியை எச்சரித்துள்ளனர் சிங்கிள்ஸ். இந்த ஆளு வேற நம்மள ரொம்ப டார்ச்சர் பண்றாரே என்பது தான் சிங்கிள்ஸின் புலம்பல்.

திருமணம்
ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் அடிக்கடி கேட்பது இரண்டே இரண்டு கேள்விகள் தான். ஒன்று நயன்தாரா எப்படி உங்களுக்கு கிடைத்தார், இரண்டாவது அவரை எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பது. பதில் சொல்லுங்க விக்னேஷ் சிவன், பதில் சொல்லுங்க.


Click it and Unblock the Notifications











