பரியேறும் பெருமாளுக்காக தீயாக வேலை பார்க்கும் விக்னேஷ் சிவன்

By Siva

Recommended Video

பரியேறும் பெருமாளுக்காக தீயாக வேலை பார்க்கும் விக்னேஷ் சிவன்- வீடியோ

சென்னை: பரியேறும் பெருமாள் படத்திற்காக இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் கடந்த 28ம் தேதி வெளியான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் வசூல் அந்த அளவுக்கு இல்லை. இந்நிலையில் தான் மக்களின் ஆதரவை பார்த்துவிட்டு தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன்

டியர் ஆமீர் கான், அமிதாப் பச்சன், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தை நாங்கள் தமிழகத்தில் விரைவில் பார்த்து ரசிக்க உள்ளோம். மனிதநேயம் மற்றும் மாறாத ஏற்றத்தாழ்வு பற்றி பேசும் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து, ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அனுராக் கஷ்யப்

ஆமீர் கானுக்கு கோரிக்கை விடுத்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட் பாலிவுட் இயக்குனரும், நடிகருமான அனுராக் கஷ்யப் கண்ணில் பட்டு இது என்ன படம், மும்பையில் சப்டைட்டிலுடன் ஓடுகிறதா என்று கேட்டார்.

தியேட்டர்

மும்பை அரோரா திரையரங்கில் சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகிறது என்று அனுராக் கஷ்யப்புக்கு பதில் அளித்தார் பா. ரஞ்சித். இது குறித்து விக்னேஷ் சிவன் ட்வீட்டியதாவது, இல்லை என்றால் அங்கு ஷோவுக்கு ஏற்பாடு செய்யட்டுமா? தயவு செய்து கூறுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விக்னேஷ் சிவன்

ட்விட்டரில் பரியேறும் பெருமாள் பட போஸ்டரை தனது டிபியாக வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும் பரியேறும் பெருமாள் படம் பற்றி தொடர்ந்து ட்வீட் செய்வதுடன் அது பற்றி வரும் விமர்சனங்களை ரீட்வீட் செய்து வருகிறார். அடுத்த இயக்குனரின் படத்தை இந்த அளவுக்கு ப்ரொமோட் செய்யும் விக்னேஷ் சிவனை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

ஆதரவு

மாரி செல்வராஜின் படத்திற்கு விக்னேஷ் சிவன் மட்டும் அல்ல பிற இயக்குனர்களும் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்து வருகிறார்கள், தியேட்டர்களில் படத்தை பார்க்குமாறு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X