1000 ரூபாயுடன் வந்தேன்.. இப்போ இப்படி வந்திருக்கேன்.. விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.. இந்தச் சூழலில் விக்னேஷ் எமோஷனலாக ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாகி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.சி: விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
எமோஷனல் போஸ்ட்: இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாரா மற்றும் இரண்டு மகன்களுடன் ஹாங்காங்கில் இருக்கும் டிஸ்னி லேண்டுக்கு சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, "இந்த இடத்துக்கு 12 வருடங்களுக்கு முன்பாக கையில் 1000 ரூபாயுடன் போடா போடி படத்தின் ஷூட்டிங்கிற்கு பெர்மிஷன் வேண்டி வந்தேன். இப்போது எனது குடும்பத்துடன் வந்திருப்பது அவ்வளவு ஸ்வீட்டாகவும், திருப்தியாகவும், எமோஷனலாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











