twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2017, 2018ல் ராதாரவி என்ன செய்தார் தெரியுமா?: புட்டு புட்டு வைத்த விக்னேஷ் சிவன்

    By Siva
    |

    Recommended Video

    Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

    சென்னை: 2018ம் ஆண்டு நடிகை ஒருவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

    கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் நயன்தாராவை கேவலமாக விமர்சித்தார்.

    தனது காதலியை விமர்சித்த ராதாரவி மீது கோபம் கொண்டு விக்னேஷ் சிவன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    ராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..!ராதாரவி சர்ச்சை பேச்சு மட்டுமல்ல.. நயன்தாரா பட விழா மேடையில் நடந்த மற்றொரு பரபரப்பு..!

    பாலியல் புகார்

    2018ம் ஆண்டு ஒரு நடிகை ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்தார். ஆனால் தான் யார் என்பதை தெரிவிக்க அவர் பயந்தார். ராதாரவி எந்த பிரச்சனையும் இல்லாமல் தப்பித்துவிட்டார். அதன் பிறகு மிஸ்டர் ராதாரவி மீ டூ இயக்கத்தை கிண்டல் செய்தார்.

    ராதாரவி

    2017ம் ஆண்டு மிஸ்டர் ராதாரவி குறைபாடு உள்ள குழந்தைகளை விமர்சித்தார். ராதாரவி போன்ற ஆண்களால் தான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்கிறது.

    கனிமொழி

    ஸ்டாலின் சார், கனிமொழி மேடம் ஆகிய இருவரும் பொள்ளாச்சி சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்கள். தயவு செய்து ஆணாதிக்கவாதியான மிஸ்டர் ராதாரவி மீது நடவடிக்கை எடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

    தற்காலிக நீக்கம்

    நயன்தாரா விவகாரத்தை அடுத்து ராதாரவியை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director Vignesh Shivan tweeted that,'In 2018, there was a sexual harassment complaint against Mr.Radha Ravi by a distressed actress, who feared to reveal her identity. He walked scotfree. A little later Mr.Radha Ravi scandalously & insensitively mocked at the #MeToo movement.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X