நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்.. பயங்கர கடுப்பில் நெருங்கிய உறவினர்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஆனால், இது தொடர்பாக இதுவரை இயக்குநர் விக்னேஷ் சிவன் எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிவையும் போடவில்லை.

இந்நிலையில், திருமணத்திற்கு நெருங்கிய உறவினர் ஒருவருக்கே அழைப்பு விடுக்கவில்லை என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

திருமணத்துக்கு ரெடி

திருமணத்துக்கு ரெடி

இயக்குநர் விக்னேஷ் சிவனை நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் இருந்தே காதலித்து வரும் நடிகை நயன்தாரா பல ஆண்டுகளுக்கு பிறகு ஒருவழியாக திருமணத்திற்கு தேதி குறித்து விட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவின் க்ரீன் சிக்னல் காரணமாக செம ஹேப்பியாகி உள்ளார்.

இந்த தேதியிலா

இந்த தேதியிலா

திருப்பதிக்கு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் சமயத்திலும், அந்த படம் ஹிட் ஆன வெற்றியை கொண்டாடவும் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு விசிட் அடித்து சாமி தரிசனம் செய்து வந்தார். இந்நிலையில், வரும் ஜூன் 9ம் தேதி திருப்பதியில் தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் ரகசிய தகவல்களை கசிய விட்டுள்ளன.

கோபத்தில் உறவினர்

கோபத்தில் உறவினர்

ஆனால், இந்த திருமணத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அழைப்பே விடுக்கவில்லை என்கிற விரக்தியை அவர் வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படியொரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

பெரியப்பாவுக்கு அழைப்பு இல்லை

பெரியப்பாவுக்கு அழைப்பு இல்லை

இயக்குநர் விக்னேஷ் சிவனின் அப்பா சிவக்கொழுந்து மற்றும் அம்மா மீனகுமாரி 70களிலேயே சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்து விட்டதாகவும், ரொம்ப நாளாவே இரு குடும்பத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்றும் கூறியுள்ளார். லால்குடியை சேர்ந்த அவர் விக்னேஷ் சிவனின் சகோதரி திருமணத்திற்கும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் இப்போதும் அவர்கள் தங்களை அழைக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.

Recommended Video

ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!
நல்லா இருக்கணும்

நல்லா இருக்கணும்

விக்னேஷ் சிவன் பெரியப்பா மாணிக்கத்திற்கு குழந்தைகள் இல்லை என்றும் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது சகோதரி ஐஸ்வர்யாவைத் தான் தனது குழந்தைகளாக நினைத்து வந்ததாகவும் ஆனால், அவர்கள் தன்னை ஒதுக்குவதாகவும் கூறியுள்ளார். மேலும், விரைவில் திருமணம் ஆகப் போகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும் என தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X