Nayanthara - நயன்தாரா வீட்டு பஞ்சாயத்து.. போலீஸ் ஸ்டேஷன்வரை கொண்டு சென்ற சொந்தக்காரர்கள்

லால்குடி: நயன்தாரவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் மீது உறவினர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.

v

நயனை சூழ்ந்த பிரச்னைகள்: இந்தச் சூழலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்டார். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் முடிந்தது. இந்த இரண்டு காதல் முறிவுகளையும் வைத்து நயன் தாராவை தனிப்பட்ட முறையில் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் நயன் அதை காதல் போட்டுக்கொள்ளாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் காதல்: தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் நயன். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். இதில் ஜவான் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவிருக்கிறது. படங்களில் நடித்துவந்தாலும் தனது மகன்களை வளர்ப்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் நயன். அதன் காரணமாக முன்னர் போல் அதிக படங்களில் நடிக்காமல் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்கள்: அதேபோல் எவ்வளவுக்கு எவ்வளவு திரைப்படம், குடும்பம் என இருக்கிறாரோ அதே அளவு தொழில் தொடங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே லிப் பாம் கம்பெனி உள்ளிட்ட தொழிலை செய்துவரும் அவர் கேரளாவில் பல அடுக்கு மாடி கொண்ட அப்பார்ட்மெண்ட்டை கட்டுவதற்கு தற்போது ரெடி ஆகிவருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதனை வாடகைக்கு விடவும் அவர் திட்டமிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பஞ்சாயத்து: இந்நிலையில் விக்னேஷ் சிவன், அவரது தாய் மீனாகுமாரி, தங்கை ஐஸ்வர்யா மீது உறவினர்கள் புகார் அளித்திருக்கின்றனர். அதாவது கோவையில் வசிக்கும் விக்னேஷ் சிவனின் உறவினரான குஞ்சிதபாதம் என்பவர்தான் சொத்து விவகாரத்தில் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் மீது லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனது இதயத்தின் நான்கு குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

விக்னேஷ் சிவனின் தந்தை ஏமாற்றிவிட்டார்: ஆனால் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏழ்மைய் நிலையில் இருக்கும் என்னிடம் வசதி இல்லை. இதனால் லால்குடியில் இருக்கும் எனது அண்ணன் மாணிக்கத்திடம் குடும்ப சொத்தில் எனக்கு சேர வேண்டியதை விற்று உதவுமாறு கேட்டேன். ஆனால் அவரோ விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து ஏற்கனவே முறைகேடாக சொத்தை விற்று ஏமாற்றிவிட்டார்.

இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும், மீதி பங்குகள் 8 பேருக்கும் உரியது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று மாணிக்கம் தெரிவித்தார். மேலும் இந்த விஷயத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாய் மீனாகுமாரி ஆகியோர் உதவினால் மட்டுமே வில்லங்கம் தீரும். மேலும் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு விரைவில் இருதய அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், சொத்தை விற்க விக்னேஷ் சிவன் உதவ வேண்டும்"என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X