twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    AK 62வில் இருந்து தூக்கி அடிக்கப்பட்ட வேதனை.. அஜித் புகைப்படத்தை நீக்கிய விக்னேஷ் சிவன்!

    |

    சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள AK 62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், விக்னேஷ் சிவன் காலதாமதம் செய்ததாகவும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை நடிகர் அஜித்துக்கு பிடிக்கவில்லை என்றும் அதிரடியாக அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என பரவிய தகவல்களை கன்ஃபார்ம் செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய மாற்றத்தை செய்துள்ளார்.

    சிம்புவின் போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். நடிகர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியராக நடித்திருப்பார்.

    விஜய்சேதுபதி, நயன்தாராவை வைத்து அவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது.

    சூர்யா படம் சரியா போகல

    சூர்யா படம் சரியா போகல

    இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்களை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் பெரியளவில் எதிர்பார்த்த நிலையில், அந்த படம் சரியாக போகவில்லை. சொடக்கு மேல சொடக்கு பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்தே காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

    நயன்தாராவுடன் திருமணம்

    நயன்தாராவுடன் திருமணம்

    நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் படப்பிடிபு தளத்திலேயே காதல் மலர்ந்து விட்டது. அதன் பின்னர் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி ரஜினிகாந்த், மணிரத்னம், ஷாருக்கான், சூர்யா, விஜய்சேதுபதி என ஒட்டுமொத்த நடிகர்கள் பட்டாளத்தையே கூப்பிட்டு அனைவரும் அறியும்படி திருமணம் செய்து கொண்டனர்.

    வாடகைத்தாய் மூலம் ட்வின்ஸ்

    வாடகைத்தாய் மூலம் ட்வின்ஸ்

    தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு புதிதாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் பல கோயில்களுக்கு சுற்றி வந்தார். கடைசியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவை வைத்து சொந்த பேனரிலேயே உருவாக்கி வெளியிட்டார். விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் அனைவரும் அறிய திருமணம் நடைபெற்ற 4 மாதங்களிலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த செய்தியையும் அவர் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.

    ஏகே62 நான் தான் பண்றேன்

    லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தை நான் தான் பண்றேன் என சமீபத்தில் நடந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியிலும் விக்னேஷ் சிவன் கூறியிருந்தார். மேலும், நடிகர் அஜித் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருப்பதாகவும், உங்க ஸ்டைல்ல படம் பண்ணுங்க எதுக்கும் கவலைப்படாதீங்க என ஊக்கப்படுத்தியதையும் சொல்லி இருந்தார்.

    எல்லாம் போச்சு

    எல்லாம் போச்சு

    ஆனால், திடீரென லைகா நிறுவனம் மற்றும் நடிகர் அஜித்துக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனின் திரைக்கதையில் நம்பிக்கை வரவில்லை என்றும் அவரது அணுகுமுறை சரியாக இல்லை என்றும் அதீத காலத்தை வீணடித்து விட்டார் போன்ற குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவரை ஏகே 62 படத்தில் இருந்தே வெளியே அனுப்பி விட்டனர் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    உறுதிப்படுத்திய விக்னேஷ் சிவன்

    உறுதிப்படுத்திய விக்னேஷ் சிவன்

    அது சும்மா வதந்தியாக இருக்கும் அதெல்லாம் அஜித் அப்படி விக்னேஷ் சிவனை ஒப்பந்தம் செய்து விட்டு மாற்றமாட்டார் என கடைசி வரை நம்பிக் கொண்டிருந்த விக்னேஷ் சிவன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும்படி தற்போது ஏகே 62 படத்தில் இருந்து தான் வெளியேறிய விஷயத்தை உறுதிப்படுத்தி உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

    அஜித் போட்டோவையே தூக்கிட்டாரு

    அஜித் போட்டோவையே தூக்கிட்டாரு

    இயக்குநர் விக்னேஷ் சிவன் தீவிர அஜித் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், நடிகர் அஜித்தின் புகைப்படத்தை ட்விட்டர் கவர் பிக்சராக வைத்திருந்தார். இந்நிலையில், தற்போது அதிரடியாக அந்த போட்டோவை விக்னேஷ் சிவன் நீக்கிவிட்டு புதிய கவர் பிக்சரை வைத்துள்ளார்.

    நெவர் கிவ் அப்

    நெவர் கிவ் அப்

    இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது புதிதாக தனது ட்விட்டர் பக்க கவர் புகைப்படமாக "Never Give up" என்கிற வாசகம் அடங்கிய மோடிவேஷனல் புகைப்படத்தை மாற்றி உள்ளார். இதன் மூலம் தான் ஏகே62 படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை அவர் மறைமுகமாக அறிவித்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Director Vignesh Shivan removes Ajith cover pic after he exit from AK 62 shocks fans. Vignesh Shivan ropes to direct for Ajith Kumar's next film but unfortunately he missed the golden chance due to poor screenplay talks going inside the industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X