For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”டியர் கொரோனா அடிச்சது போதும்டா க்விட் பண்ணுடா” – விக்னேஷ் சிவனின் இந்த திடீர் ட்வீட் ஏன் தெரியுமா?

    |

    சென்னை: பொங்கல் அன்று ஒரு தீபாவளிக்கு தயாராகுவோம் என ட்வீட் போட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், கொரோனாவுக்கும் ஒரு டியர் போட்டுள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிட்டத்தட்ட 2020ம் ஆண்டு முழுவதுமே சினிமா துறை முடங்கிப் போனது என்று சொல்லலாம்.

    கொலைவெறியுடன்… ரத்தம் தெறிக்கும்..பிரபல நடிகரின் மாஸ் புகைப்படம் !

    மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீசாவதை முன்னிட்டு இப்படியொரு ட்வீட்டை விக்னேஷ் சிவன் போட்டுள்ளார்.

    பொங்கலுக்கு ஒரு தீபாவளி

    பொங்கலுக்கு ஒரு தீபாவளி

    கடந்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி 300 கோடி வசூலை ஈட்டியது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், விஜய் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை அந்த படம் பெற்றது. இந்த ஆண்டு மாஸ்டர் ரிலீசாகும் என எதிர்பார்த்த நிலையில், வரும் பொங்கலுக்கு ஒரு தீபாவளியாக மாஸ்டர் ரிலீசாக போகிறது என விக்னேஷ் சிவன் ட்வீட் போட்டுள்ளார்.

    பிரபஞ்சம் சரி செய்யவேண்டும்

    பிரபஞ்சம் சரி செய்யவேண்டும்

    பல மாதங்களாக படுத்துக் கிடக்கும் தியேட்டர் மற்றும் சினிமா தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று எழ வேண்டும், பொங்கலுக்கு தியேட்டர்களில் மக்கள் கூட்டமாக வந்து படம் பார்க்க இந்த பிரபஞ்சம் உரிய வழியை செய்யும் என எதிர்பார்க்கிறேன். மீண்டும் பழையபடி சினிமா மற்றும் தியேட்டர் தொழில் செழிக்க வாழ்த்தி உள்ளார்.

    டியர் கொரோனா

    டியர் கொரோனா

    மேலும், எல்லாத்தையும் விட ஹைலைட்டே இதுதான். டியர் கொரோனா - அடிச்சது போதும் க்விட் பண்ணுடா என மாஸ்டர் படத்தில் தனது வரிகளில் இடம்பெற்ற பாடல் வரிகளை கொண்டே கொரோனா ஒழுங்கா ஓடிப் போயிடு, இனிமேலும், எங்களை டார்ச்சர் பண்ணா பாடி தாங்காது என்கிற ரேஞ்சுக்கு விக்னேஷ் சிவன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

    பாட்டாவே பாடிட்டியா

    பாட்டாவே பாடிட்டியா

    இயக்குநர் விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர் ஒருவர், கொரோனா விக்னேஷ் சிவனிடம் சொல்வது போல, ஓ பாட்டாவே பாடிட்டியா என போட்டோ கமெண்ட் போட்டு கமெண்ட் பக்கத்தை கலகலப்பாக்கி உள்ளார். வரும் பொங்கல் நம்ம பொங்கல், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் களைகட்டும் என தளபதி ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

    சிக்கல் இல்லாமல்

    சிக்கல் இல்லாமல்

    மேலும், சிலர், உருமாறிய கொரோனா காரணமாக அடுத்த ஆண்டு மீண்டும் லாக்டவுன் ஏதும் போட்டு விடக் கூடாது என்றும், பொங்கலுக்கு எதிர்பார்த்த படி மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும், கொரோனா பிரச்சனை இந்த ஆண்டுடன் முடிந்து வரும் ஆண்டு மக்கள் சிக்கல் இல்லாமல் வாழ வழி செய்ய வேண்டும், மாஸ்டர் படத்தை கூட்டத்தோடு தியேட்டரில் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    English summary
    Vignesh Shivan request to corona virus for smooth Master theatrical release. He also mentioned Dear Corona please exit from the Universe.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X