இந்த ரெண்டு பெண்கள் இல்லைன்னா நான் இல்லை... என்னோட சக்சஸ் இல்லை... மனம்திறந்த விக்னேஷ் சிவன்!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

ரசிகர்களுடன் தியேட்டரில்.. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பார்த்த நயன்தாரா, விஜய்சேதுபதி!

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் இதன் மேக்கிங் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரசிகர்களுடன் படம் பார்த்த டீம்

ரசிகர்களுடன் படம் பார்த்த டீம்

நீண்ட நாட்களாக படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் படம் ரிலீசாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் திரையரங்கில் சென்று ரசிகர்களுடன் படத்தை பார்த்தனர்.

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

ரசிகர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்பு

இதன்போது ரசிகர்களின் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் பங்கேற்றனர். அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். விக்னேஷ் சிவன், ரசிகர்களுடன் இணைந்து நடனம் ஆடிய வீடியோவும் வைரலானது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் முன்னதாக வெளியான நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விருப்ப லிஸ்ட்டில் பாடல்கள்

விருப்ப லிஸ்ட்டில் பாடல்கள்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களின் விருப்ப லிஸ்ட்டில் இடம்பெற்றது. படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் உள்ள நிலையில், சமந்தா இந்தப் படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

தாய் குறித்து நெகிழ்ச்சி

தாய் குறித்து நெகிழ்ச்சி

இந்நிலையில் இந்தப் படத்திற்காக விக்னேஷ் சிவன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய சொந்த வாழ்க்கை, படம் மற்றும் நயன்தாரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தான் 12வது படித்துக் கொண்டிருந்தபோது தன்னுடைய தந்தை இறந்து விட்டதாகவும், தான் வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதையும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மாவின் ஊக்கம்

அம்மாவின் ஊக்கம்

ஆனால் அந்த தருணத்தில் தன்னுடைய தாய் தனக்கு ஊக்கமளித்ததாகவும், தனக்கு விருப்பமானவற்றை செய்துக் கொள்ள தனக்கு சுதந்திரம் அளித்ததாகவும் வீட்டு பாரத்தை அவர் தாங்கிக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் தான் தன்னுடைய லட்சியத்தை அடைய முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா கொடுத்த தன்னம்பிக்கை

நயன்தாரா கொடுத்த தன்னம்பிக்கை

இதேபோல, பல சந்தர்ப்பங்களில் தனக்கு நயன்தாரா ஊக்கம் அளித்ததாகவும், நானும் ரவுடிதான் படத்தை எடுக்க அவர் கொடுத்த தன்னம்பிக்கையே தன்னை படம் எடுக்க தூண்டியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தான் தளரும் போதெல்லாம் அவர் தனக்கான பக்கபலமாக இருந்து வருவதையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

உண்மையை உரக்கசொன்ன வீடியோ

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, காத்து வாக்குல ரெண்டு காதல் செய்வதாக வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் விக்னேஷ் சிவனை பின்புறம் இருந்து நயன்தாரா தட்டிக் கொடுப்பதாக அமைந்திருந்தது. இது விக்னேஷ் சிவனின் பேட்டியை உண்மையாக்குவதாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X