ஏன் விக்னேஷ் சிவன், தோனி நல்லா இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?
Recommended Video

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறிவிட்டது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து புதுப்பட அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மீண்டும் சூர்யாவை வைத்து படம் எடுக்குமாறு அவரின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது.
தோனி
கிரிக்கெட் வீரர் தோனியை சந்திக்க வேண்டும் என்கிற விக்னேஷ் சிவனின் கனவு நிறைவேறியுள்ளது. தோனியை சந்தித்த தருணம் தான் தனு வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானது என்று தெரிவித்துள்ளார் விக்கி. மேலும் தோனி இந்த நாட்டை ஆளும் நாளை பார்க்க காத்திருப்பதாகவும் விக்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொளுத்திப் போடுவோம்
தோனி அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று உள்ளார். இந்நிலையில் அவரை போய் அரசியலுக்கு அழைக்கிறாரே விக்னேஷ் சிவன். விக்கியின் ட்வீட்டை பார்த்து ரசிகர்களும் தோனியை ஆட்சி செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். கொளுத்திப் போடுங்க.
பதக்கம்
தோனி இந்த நாட்டை ஆட்சி செய்தால் ஒலிம்பிக்கில் இந்தியா பல பதக்கங்களை வெல்லும். விளையாட்டு துறை மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் நம் நாடு முன்னேற கனவு காண்பதாக ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

தாராள மனசு
விக்னேஷ் சிவனுக்கு தாராள மனசு. தன் படம் மட்டும் அல்ல அடுத்த படங்களுக்கும் விளம்பரம் செய்கிறார். பிற இயக்குனர்களின் படங்களை பாராட்டுகிறார். அது எல்லாம் சரி. ஆனால் தோனியை இப்படி கோர்த்துவிடுவது சரியா?


Click it and Unblock the Notifications











