நயன்தாரா -சமந்தா லூட்டிய பாக்க ரெடியா... புக்கிங் ஸ்டார்ட் ஆயிடுச்சு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள 3வது படம் காத்து வாக்குல ரெண்டு காதல் படம். இவர்கள் இருவரையும் நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார். இந்தக் கூட்டணியில் சமந்தாவும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. குறிப்பாக அனிருத் இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளன. சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவின் நடிப்பில் வெளியான திப்பாம் தப்பாம் பாடலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

நயன்தாரா -சமந்தா லூட்டி
படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவின் லூட்டி சிறப்பாக பார்க்கப்படுகிறது. சிறப்பான காமெடி கலாட்டாவாக படம் அமைந்துள்ளதாக தெரிகிறது. இரண்டு பேரையும் விஜய் சேதுபதி காதலிப்பதாகவும் அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளும் கதையில் பேசப்பட்டுள்ளது.

காமெடி கலாட்டா
நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய விக்னேஷ் சிவனின் முந்தைய படங்களில் காமெடி முக்கியமான களமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் முழுநேர காமெடியை கதைக்களமாக அவர் கொண்டுள்ளதாக தெரியவருகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போன நிலையில் தற்போது படம் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

28ம் தேதி ரிலீஸ்
படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் புக்கிங்குகள் தற்போது துவங்கியுள்ளன. படத்தின் முதல்நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் படத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

நயன்தாரா -விக்னேஷ் சிவன் தயாரிப்பு
படத்தை விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











