விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல்… விறுவிறுப்பான இறுதிகட்ட படப்பிடிப்பு !

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், லலித்குமார் வழங்க முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணி காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். நானும் ரௌடிதான் படத்திற்காக இணைந்த இந்த கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. நிலைமை சீரானதை அடுத்து, படப்பிடிப்பை தொடங்கவிருந்த நிலையில் விஜய்சேதுபதியின் கால் ஷீட் கிடைக்காததால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

படப்பிடிப்பில் பிஸி

படப்பிடிப்பில் பிஸி

விஜய் சேதுபதி 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனால் ஒவ்வொரு படத்திற்கும் பிரித்து பிரித்து தேதியை கொடுத்துள்ளார். திண்டுக்கல்லில் பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அங்கு படப்பிடிப்பு தாமதமானதால், அவரால், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது.

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு

பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு

இதையடுத்து, தற்போது காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி உள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பை முடித்த கையோடு, அடுத்தக்கட்ட பணிகளை விரைந்து முடித்து, அக்டோபரில் படத்தை வெளியிட 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

ஒரேகட்டமாக

ஒரேகட்டமாக

நடிகை நயன்தாரா, குடும்ப உறவுகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திகில் படம் ஒன்றில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதை புதுமுக இயக்குனர் விக்னேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. மதுரையிலும். சென்னையிலும் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

நெற்றிக்கண் அசத்தலான நடிப்பு

நெற்றிக்கண் அசத்தலான நடிப்பு

நயன்தாரா நடித்துள்ளள நெற்றிக்கண் திரைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. அந்த படத்தில், பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் அனைவரும் அசந்து போகும் அளவில் நடித்துள்ளார் நயன்தாரா.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

நயன்தாராவுக்கு ஏற்கனவே ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வெளியாகிறது. மேலும் 6 புதிய படங்களில் நடிக்கவும் நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளார். 2 தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X