இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்!

By

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்குகிறது

சிம்பு நடித்த போடா போடி-யை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார்.

இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.

நயன்தாரா காதல்

நயன்தாரா காதல்

2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ஹிட்டானது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் பட ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா விழாக்களுக்குச் சென்று வரத் தொடங்கினர்.

கவனிப்பை பெறவில்லை

கவனிப்பை பெறவில்லை

அந்தப் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் பெரிய கவனிப்பை பெறவில்லை. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார்.

வேறு கதை

வேறு கதை

அதை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இதற்கானப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்தார். அதுதான் காத்துவாக்குல ரெண்டு காதல்.

Recommended Video

Nayanthara Family Surprise Birthday Party | Vignesh Shivan, Celebrity Wishes | Filmibeat Tamil
டிசம்பரில் ஷூட்டிங்

டிசம்பரில் ஷூட்டிங்

இதில், விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நயன்தாராவும் சமந்தாவும் நடிக்கின்றனர். இந்தப் படம் கொரோனா காரணமாகத் தள்ளிப் போனது. இப்போது இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கீரின் ஸ்டூடியோவும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X