நயன்தாரா வீட்டில் விரைவில் 'குவா குவா' சத்தம் கேட்கப் போகுதா? விக்கி இப்படி போஸ்ட் போட்டிருக்காரே!
சென்னை: துபாயில் சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் 8வது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் நயன்தாரா.
என்ன 8வது பிறந்தநாளா? அய்யோ எழுத்துப் பிழை எல்லாம் இல்லைங்க நயன்தாராவுடன் தனது 8வது பிறந்தநாளை கொண்டாடுகிறேன் என இயக்குநர் விக்னேஷ் சிவனே போஸ்ட் போட்டுள்ளார்.
ஆனால், இங்கே மேட்டரே அது இல்லை, தனியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவுக்கு அவர் கொடுத்த கேப்ஷன் தான் ரசிகர்களை குழப்பி உள்ளது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம்
2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக் கொண்ட இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்துவாக்குல அவர்கள் காதல் சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு வழியாக இந்த ஆண்டு பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் சினிமா பிரபலங்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூனும் சுற்றுலாவும்
தாய்லாந்துக்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஹனிமூன் சென்று வந்த நிலையில், செகண்ட் ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டில் பல நாட்கள் டேரா அடித்தனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் இருவரும் கொண்டாடி உள்ளனர். ஆனால், இந்த முறை தனியாக செல்லாமல் குடும்பத்தையே கூட்டிக் கொண்டு பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.

நயன்தாரா கர்ப்பமா
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார். மேலும், சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் உள்ள ஒரு போஸ்ட்டை பார்த்து விட்டு ரசிகர்கள் என்ன நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? விரைவில் அப்பாவாக போறீங்களா விக்னேஷ் என ரசிகர்கள் வாழ்த்த ஆரம்பித்துள்ளனர்.

என்ன போஸ்ட்
குழந்தைகளுடன் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொஞ்சி விளையாடும் போட்டோவை போட்ட விக்னேஷ் சிவன் அதற்கு கேப்ஷனாக Some Kids Time: Practising for the Future என பதிவிட்டுள்ளது தான் தற்போது இப்படியொரு கேள்வியை எழுப்பி உள்ளது. ரன்பீர் கபூர் - ஆலியா பட் போல இவர்களும் திருமணம் செய்த உடனே குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்து விட்டார்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா லைன் அப்
தமிழில் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் எனும் பேய் படம் விரைவில் வெளியாக போகிறது. இந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்துள்ளார். அந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது. தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் உடன் இணைந்து நயன்தாரா நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது. மலையாளத்தில் பிரித்விராஜ் உடன் அலோபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

ஏகே 62 இருக்கு
ஊர்க்குருவி உள்ளிட்ட படங்களை தயாரித்து வரும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார். விரைவில் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஏகே 62 படத்தின் பணிகளை அவர் ஆரம்பிப்பார் என்பது தெரியகிறது. ஹெச். வினோத் மாதிரி நிச்சயம் அப்டேட்டுக்காக ரசிகர்களை காக்க வைக்க மாட்டார் விக்னேஷ் சிவன் அடிக்கடி அவரே இன்ஸ்டாவில் அப்டேட்களை கொடுத்து விடுவார் என இப்போதே அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











