நாமதான் நார்மல் பீப்பிள் இல்லையே.. LIK பட ப்ரோமோ.. போற போக்கில் நயன்தாராவுக்கு ஒரு குட்டு
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் எல்ஐகே திரைப்படத்தின் வேலைகள் முடிந்துவிட்டாலும் ரிலீஸாகாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. பிரதீப் ரங்கநாதன் வரிசையாக மூன்று படங்கள் ஹிட் கொடுத்ததைபோல இந்தப் படமும் பஹிட் கொடுக்குமா என்ற கேள்வி ஒட்டுமொத்த திரைத்துறையினரிடமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடலசிரியர் என பல முகங்களை கொண்டவர் விக்னேஷ் சிவன். அவர் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு முன்பே அவர் இயக்குநராக போடா போடி படத்தில் அறிமுகமானார். அப்படத்துக்கு போட்டியாக துப்பாக்கி படம் ரிலீஸானதால் இப்படம் இருக்கும் இடம் தெரியாமலேயே போனது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய நானும் ரௌடிதான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படம் ஹிட்டானது மட்டுமின்றி நயனுடனான காதலுக்கு அந்தப் படம்தான் வழிவகுத்தது.

சறுக்கிய விக்னேஷ் சிவன்: நானும் ரௌடிதான் படத்தின் வெற்றி விக்னேஷ் சிவனுக்கு பெரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தது. அந்தவகையில் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் தோல்வியையே சந்தித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். எப்படியாவது கம்பேக் கொடுத்திட வேண்டும் என்றும் திட்டத்தோடு இருந்தார்.
சூப்பர் வாய்ப்பு மிஸ்ஸிங்: அப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடாமுயற்சிக்கு பதிலாக அதில்தான் முதலில் ஏகே நடிப்பதாக இருந்தது. எப்படியாவது அந்தப் படத்தை இயக்கி இழந்த பெயரை மீட்டுவிட வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பு தரப்புக்கு ஒத்துவராததால் அப்படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். விக்கி வெளியேறினாரா இல்லை வெளியேற்றப்பட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.
பிரதீப்புடன் எல்ஐகே: இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வரிசையாக தோல்வி கொடுத்துவரும் விக்னேஷ் சிவனும், வரிசையாக ஹிட் மேல் ஹிட்டாக கொடுத்துவரும் பிரதீப்பும் இணைந்திருக்கும் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்து இரண்டு சிங்கிள்களும் வெளியாகி வரவேற்பை பெற்றன.
ப்ரோமோ வீடியோ: ஆனால் படம் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. இந்நிலையில் படமானது ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவுள்ளது. அதுதொடர்பாக வெளியான ப்ரோமோ வீடியோவில், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன், அனிருத் ஆகிய மூன்று பேரும் தோன்றியிருக்கிறார்கள். அதில் படம் தாமதமாக ரிலீஸாவதற்கு நான் காரணமில்லை என்பதை ஜாலியாக விளக்குகிறார் விக்கி. மேலும் அவரிடம் அனிருத், 'விக்கி நாமதான் நார்மல் பீப்பிள் இல்லையே' என கலாய்க்கவும் செய்திருக்கிறார். முன்னதாக, ஒருமுறை மதுரைக்கு சென்றிருந்தார்கள் விக்கியும், நயனும். அப்போது அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் இவர்கள் இரண்டு பேரும் நார்மல் பீப்பிள் இல்லை என கூறியது வைரலானது. பலரும் விக்கியைய்ம், நயனையும் கிண்டலடித்தார்கள் என்பது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications















