பிரதீப் ரங்கநாதனின் LIK.. இரண்டாவது சிங்கிள் பட்டுமா வெளியானது.. செம மெலோடியா இருக்கே

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் எல் ஐகே திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. மூன்று படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்ததைபோல இந்தப் படமும் பிரதீப்புக்கு ஹிட் கொடுக்குமா என்ற கேள்வி ஒட்டுமொத்த திரைத்துறையினரிடமும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கவனத்தை ஈர்த்திருக்கிறது.

நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன் முதன்முதலாக இயக்கிய போடா போடி திரைப்படம் நல்ல படமாக இருந்தாலும்; போட்டியாக துப்பாக்கி படம் ரிலீஸானதால் இப்படம் இருக்கும் இடம் தெரியாமல் போனது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய நானும் ரௌடிதான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படம் ஹிட்டானது மட்டுமின்றி நயனுடனான காதலுக்கு அந்தப் படம்தான் வழிவகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சறுக்கலில் விக்னேஷ் சிவன்: நானும் ரௌடிதான் படத்தின் வெற்றி விக்னேஷ் சிவனுக்கு பெரிய வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க ஆரம்பித்தது. அந்தவகையில் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரை வைத்து இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படமும் தோல்வியையே சந்தித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார் விக்கி.

Vignesh Shivan s LIK Second Single Pattuma Out Now Pradeep Ranganathan s Dance Goes Viral
Photo Credit:

சூப்பர் வாய்ப்பு; ஆனால் மிஸ்ஸிங்: அப்படிப்பட்ட சூழலில்தான் அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது அந்தப் படத்தை இயக்கி இழந்த பெயரை மீட்டுவிட வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருந்தார். ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதி சரியாக இல்லாததால் அப்படத்திலிருந்து வெளியேறினார் விக்னேஷ் சிவன். விக்கி வெளியேறினாரா இல்லை வெளியேற்றப்பட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

எல்ஐகே: இப்படிப்பட்ட சூழலில்தான் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோரை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வரிசையாக தோல்வி கொடுத்துவரும் விக்னேஷ் சிவனும், வரிசையாக ஹிட் மேல் ஹிட்டாக கொடுத்துவரும் பிரதீப்பும் இணைந்திருக்கும் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது சிங்கிளான பட்டுமா என்ற பாடல் இன்று வெளியாகியிருக்கிறது. இப்பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார். அனிருத்தின் சூப்பர் மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் இனிவரும் நாட்களில் கண்டிப்பாக பெரிய வரவேற்பை பெறும் என்று அனியின் ரசிகர்கள் அடித்து கூற ஆரம்பித்து சென்சேஷனல் ஆக்கிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X