எல்ஐகே படத்தில் அந்த சீன் ரஜினி பட காப்பியா?.. விக்னேஷ் சிவன் மாட்டிக்கிட்டாரு.. என்ன விக்கி இது?

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக எல்ஐகே என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அதில் க்ரீத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு ஏப்ரல் பத்தாம் தேதி படமானது வரவிருக்கிறது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. சூழல் இப்படி இருக்க அதில் ஒரு சீன் காப்பி என்ற சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். யூத்ஃபுல்லான காதல் கதையை எடுத்திருந்த அவர்; விஜய் நடித்த துப்பாக்கி படத்தோடு ரிலீஸ் செய்தார். அதன் காரணமாக அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால் விக்கிக்கு பெயர் கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார். அதேசமயம் சினிமாவை விட்டு போகவில்லை. என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதினார். விஐபி படத்தில் சில நிமிடங்கள் நடித்திருந்தார்.

Vignesh Shivan s LIK Trailer Sparks Copy Controversy Inspired by Rajinikanth s Lingaa
Photo Credit:

நானும் ரௌடிதான்; நயனுடன் காதல்: சில வருடங்களுக்கு பிறகு தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா, விஜய் சேதுபதி, ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில் நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இவரும் கோலிவுட்டில் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். போதாக்குறைக்கு அந்தப் படத்தில் பணியாற்றியபோது நயனை காதலிக்கவும் செய்தார். அதுவும் அவருக்கு அதீத புகழை பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
இதுக்கு முன் கட்டிப்பிடிச்சதே இல்லையா?.. கவினிடம் ஓபனாக கேட்ட நயன்தாரா.. கூச்சமே போயிடுச்சாம்
இதுக்கு முன் கட்டிப்பிடிச்சதே இல்லையா?.. கவினிடம் ஓபனாக கேட்ட நயன்தாரா.. கூச்சமே போயிடுச்சாம்

திருமணம் செய்துகொண்ட ஜோடி: காதலிக்க ஆரம்பித்த பிறகு சில வருடங்கள் இரண்டு பேரும் லிவிங்கில் இருந்தார்கள். திருமணம் செய்துகொள்ளும் மனநிலைமை வந்ததும் கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் வாடகை தாய் மூலம் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். நயனை திருமணம் செய்த கையோடு அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கும் வாய்ப்பு விக்கிக்கு அமைந்தது. அவரும் முழு கதையை ரெடி செய்து லைகாவிடம் சொல்ல; அவர்களுக்கு கதையின் இரண்டாம் பாதியில் திருப்தியில்லை என்றும்; அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டதாகவும் ஒரு பேச்சு உண்டு.

எல்ஐகே பிரதீப் ரங்கநாதன்: அஜித் பட வாய்ப்பு மிஸ் ஆனதை அடுத்து பிரதீப் ரங்கநாதனை லீடு ரோலில் வைத்து எல்ஐகே படத்தை இயக்கியிருக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரீத்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் முடிந்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டாலும் சில காரணங்களால் ரிலீஸாகாமல் தள்ளிப்போனது. ஒருவழியாக ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்ற எண்ணமும் ரசிகர்களிடையே தோன்றியிருக்கிறது.

அந்த சீன் காப்பியா?: ட்ரெய்லரில் பிரதீப் ரங்கநாதன் எஸ்.ஜே.சூர்யாவிடம், தனது இதயத்தை குறிப்பிட்டு, 'இந்த ஒரு ஸ்கொயர் ஃபீட் சரியாக இருந்தால் சுற்றி இருக்கும் எல்லாம் சரியாக இருக்கும்' என வசனம் பேசுவார். அது ரசிகர்களிடம் புருவத்தை உயர்த்த செய்தது. ஆனால் அதை சுற்றி இப்போது ஒரு சர்ச்சை எழுந்திருக்கிறது. அதாவது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்திலும், இதே மாதிரியான வசனத்தை ரஜினி பேசுவார். அதை பார்த்த ரசிகர்கள் லிங்கா படத்திலிருந்து விக்கி எடுத்திருக்காரோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X