கோலிவுட்டை தாண்டி குஜராத்திக்கு சென்ற விக்னேஷ் சிவன்.. மோனல் கஜ்ஜருடன் புதிய படம்!

சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் முதன்முறையாக குஜராத்தி மொழியில் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது.

சிம்பு, வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.

ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நெற்றிக்கண், கூழாங்கல், காத்துவாக்குல ரெண்டு காதல், ஊர்க்குருவி, கனெக்ட் என ஏகப்பட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

அன்பான இயக்குநர்

அன்பான இயக்குநர்

சிம்புவின் போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குநர் ஆனார். அடுத்ததாக அவர் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் கூடுதலாக சமந்தா நடிக்க காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி உள்ளார்.

நயன்தாராவுடன் காதல்

நயன்தாராவுடன் காதல்

நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் நடிகை நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனுக்கு காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர். மேலும், ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் இணைந்து நடத்தி வருகின்றனர். கூழாங்கல் திரைப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்த நிலையில், தரமான படங்களை தயாரிக்கும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர்.

குஜராத்தி மொழியில்

குஜராத்தி மொழியில்

தென்னிந்திய சினிமாவை கடந்து பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் குஜராத்தி மொழியில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அதன் அறிவிப்பை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர்

தேசிய விருது பெற்ற இயக்குநர்

குஜராத்தி மொழியில் உருவாக உள்ள படத்தை முதல் முதலாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிஷ் சைனி இயக்கவுள்ளார். குஜராத்தி மொழியில் முன்னணி நடிகராக அசத்தி வரும் மல்ஹர் தக்கர் நாயகனாகவும் மோனல் கஜ்ஜர் நாயகியாகவும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

மோனல் கஜ்ஜர்

மோனல் கஜ்ஜர்

2014ம் ஆண்டு வெளியான சிகரம் தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் என இரு படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்கள் உள்ளத்தை கொள்ளையடித்தவர் மோனல் கஜ்ஜர். குஜராத்தில் பிறந்த இவர், தமிழ், தெலுங்கு மற்றும் குஜராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராகவும் இவர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X