»   »  விக்னேஷ் சிவனுக்கு ட்விட்டரில் கண்டம்: இந்தா வசமா சிக்கிட்டாருல!

விக்னேஷ் சிவனுக்கு ட்விட்டரில் கண்டம்: இந்தா வசமா சிக்கிட்டாருல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டி சூர்யா ரசிகர்களிடம் மறுபடியும் வசமாக சிக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

Select City
Buy Velaikkaran (U) Tickets

சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியதே தவிர விக்கி படம் பற்றி ஒரு தகவலும் தெரிவிப்பது இல்லை.


இந்த காரணத்தால் சூர்யா ரசிகர்கள் விக்கி மீது செம கடுப்பில் உள்ளனர்.


புகைப்படம்

புகைப்படம்

ஃபர்ஸ்ட் லுக் எங்கய்யா என்று தொண்டை தண்ணீர் வற்றும் வரை ரசிகர்கள் கதறிய பிறகு சூர்யாவின் புகைப்படம் ஒன்றை மட்டும் வெளியிட்டார் விக்கி. மீம்ஸ் போதும் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களில் என்று ட்வீட்டினார் விக்கி.


வேலைக்காரன்

தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுமாறு சூர்யா ரசிகர்கள் கெஞ்சி, திட்டி, மீம்ஸ் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கும்போது விக்கியோ வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்கை ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.


ரசிகர்கள்

விக்கி வேலைக்காரன் ஃபர்ஸ்ட் லுக்கை பாராட்டி ட்வீட்டியிருப்பதை பார்த்த சூர்யா ரசிகர்களோ தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் எங்க சார் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.


குருநாதா

குருநாதா ... கடைசி வரைக்கும் எங்களுக்கு Fan made poster தானா குருநாதா...!!! கருணை காட்ட மாட்டீங்களா????😢😢😢 என ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


ட்வீட்

எல்லா எஃப்எல்லுக்கும் ட்வீட் பண்றீங்க...தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் எப்போதான் ரிலீஸ் பண்ணுவீங்க...😕😕😕😕😕 #Waiting For TSK FL Date என்று கமெண்ட் போட்டுள்ளார் சூர்யா ரசிகர்.


பொறுமை

ஓரளவுக்கு தான் பொறுமைலாம் அதுக்குள்ள எதையாச்சும் விடு #TSKFirstLook என்று ஒரு ரசிகர் பயங்ரமாக கடுப்பாகி ட்வீட்டியுள்ளார்.


நல்லா இருக்கா?

இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா... எல்லாத்துக்கும் விஷ் பண்றேல் எங்கள கண்டுக்க மாட்டீங்கறேல்..அந்த டீஸர் ட்ரெய்லர் ஒன்னு விடலாம் என்கிறார் ரசிகர் ஒருவர்.


English summary
Suriya fans couldn't keep quiet after seeing director Vignesh Shivan tweeting about Velaikkaran first look. Vignesh is yet to release TSK first look.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil