இதுக்கு தான் வெயிட்டிங்...திருமண சீக்ரெட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

சென்னை : கோலிவுட்டின் ஹாட் லவ் ஜோடி என்றால் அது நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி தான். இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் க்யூட்டான ஃபோட்டோக்களை வெளியிட்டு, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல ஹிட் படங்களை தயாரித்து வருகின்றனர். இவர்களின் அடுத்த தயாரிப்பாக தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு சுவாரஸ்ய பதில்

ரசிகர்களுக்கு சுவாரஸ்ய பதில்

விக்னேஷ் சிவன் தனது புதிய படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் ரசிகர்களின் கேள்விகளுக்கும் சுவாரஸ்யமாக பதிலளித்து வருகிறார்.

ஏன் இன்னும் திருமணம் பண்ணல

ஏன் இன்னும் திருமணம் பண்ணல

ரசிகர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்து வருகிறார் விக்னேஷ் சிவன். அப்படி சமீபத்தில் ரசிகர் ஒருவர், நயன்தாரா மேடமை ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

ரொம்ப செலவாகும் ப்ரோ

ரொம்ப செலவாகும் ப்ரோ

அதற்கு விக்னேஷ் சிவன் அளித்த பதில், அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. அவர் தனது பதிலில், " கல்யாணம், மத்ததுக்கு எல்லாம் ரொம்ப செலவாகும் ப்ரோ...அதனால் திருமண பணத்தை மிச்சம் பண்ணவும், கொரோனா போவதற்காகவும் தான் காத்திருக்கிறேன்" என்றார்.

விக்கி பகிர்ந்த அன்சீன் ஃபோட்டோ

விக்கி பகிர்ந்த அன்சீன் ஃபோட்டோ

அத்துடன் ரசிகர்கள் பார்க்க ஆசைப்பட்டு கேட்டுக் கொண்டதால், நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட சில அன்சீன் ஃபோட்டோக்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் நயன்தாராவை புடவையில் பார்க்க தான் தனக்கு ரொம்ப பிடிக்கும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.

ரஜினியை இயக்குவது தான் கனவு

ரஜினியை இயக்குவது தான் கனவு

மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், என்னை சினிமா உலகிற்கு வர தூண்டியதே சூப்பர்ஸ்டார் ரஜினி தான். அவரது படத்தை இயக்கினால், குடும்ப பொழுதுபோக்கு படமாக இயக்குவேன். அது தான் என கனவு படமாக இருக்கும் என்றார். அந்த படத்தில் தனக்கு பிடித்த பல நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் இருப்பார்கள் என கூறி உள்ளார் விக்கி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X