தோனியை விரைவில் இயக்கப் போகிறேன்.. விக்னேஷ் சிவன் போட்ட பக்கா போஸ்ட்.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
சென்னை: கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியை விரைவில் இயக்கப் போவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக சென்னையில் முகாமிட்டுள்ள சென்னை அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனியை சந்தித்த நிலையில், அவருடன் எடுத்துக் கொண்ட செம க்யூட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் ஷேர் செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் சினிமா பக்கம் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், தோனியும் விரைவில் கோலிவுட் படத்தில் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தோனி ரசிகர்
அமைதியும் ஆற்றலும் ஒருங்கே பெற்ற மனிதரான தோனி இந்தியாவிற்கே பிரதமராக வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னதாக கூறியிருந்த விக்னேஷ் சிவன் தான் ஒரு தீவிர தோனி ரசிகர் என்பதை அடிக்கடி நிரூபித்து வந்த நிலையில், தோனியுடன் தற்போது சூப்பரான சந்திப்பை மேற்கொண்டு இருக்கிறார்.

தோனி விக்னேஷ் சிவன் சந்திப்பு
வாழ்க்கை மிகவும் அழகானது. இப்படியொரு வாய்ப்பு எனக்கு என் வாழ்நாளில் கிடைக்குமா? என நினைத்துப் பார்க்கவில்லை. அப்படியொரு தருணம் இது. இதனை கேப்ஷன்களால் அடக்க முடியாது என தோனியுடனான சந்திப்பில் அவருக்கு பூங்கொத்தை கொடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

சந்திக்க வைத்த கதை
தோனியை சந்திக்க வைத்ததே தன்னிடம் இருந்த அருமையான கதை தான் என்று அனைவரும் அறிந்து கொள்ள அறிவித்துள்ள விக்னேஷ் சிவன் விரைவில் தோனியை தான் இயக்கப் போகிறேன் என்கிற அறிவிப்பையும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் இயக்குநர் விக்னேஷ் சிவனை வாழ்த்தி வருகின்றனர்.

அதர்வா
ஏற்கனவே லைவ் காமிக்ஸ் படைப்பாக உருவாகி உள்ள அதர்வா எனும் படைப்பில் தோனி கமிட் ஆகி உள்ளார். இந்நிலையில், கூடிய விரைவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கப் போகிறாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பகவதியம்மன் அருள்
சமீபத்தில் தனது காதலி நயன்தாராவுடன் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் சாமி தரிசனம் செய்த நிலையில், பகவதி அம்மனின் அருள் தான் இப்படியொரு வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல்
வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்துள்ள அந்த திரைப்படம் நானும் ரெளடி தான் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











