மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்: 'லாங் லிவ்வு' என்று வாழ்த்திய தல ரசிகர்கள்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்வீட் போட்டுள்ளார்.
அஜித்தின் பிறந்தநாள் மே மாதம் 1ம் தேதி வருகிறது. அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டனர். இந்நிலையில் தல ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ஒரே மாதிரியான டிபி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தல ரசிகரான இயக்குநர் விக்னேஷ் சிவனும் அதே டிபியை வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன்
இன்டர்நெட் இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டதால் உடனே டிபியை வெளியிட முடியவில்லை என்று கூறி தல ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தலக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்து என்று தெரிவித்துள்ளார் அவர்.

படம்
விக்னேஷ் சிவன் தல ரசிகர் ஆவார். அஜித்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். தன் காதலியான நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜித்துடன் சேர்ந்து படம் பண்ண காத்துக் கொண்டிருக்கிறார்.
டிபி
தல பிறந்தநாள் டிபியை வெளியிட்டதற்காக விக்னேஷ் சிவனுக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். லாங் லிவ்வு, ஹேப்பி லைஃபு என்று விஸ்வாசம் ஸ்டைலில் வாழ்த்தியுள்ளனர்.
ரசிகர்கள்
அஜித் பிறந்தநாளுக்கு 2 நாள் இருக்கும் நிலையில் ட்விட்டரில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











