சர்ச்சைக்கு முடிவு கட்டிய விக்னேஷ் சிவன்...திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம்

சென்னை : திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சர்ச்சையில் சிக்கிய நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக விளக்கமாக மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு மிக பிரம்மாண்டமாக ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. ரஜினி, ஷாருக்கான், விஜய் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் பற்றி பல தகவல்கள் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

திருமணம் முடிந்ததும் அடுத்து என்ன பிளான் வைத்துள்ளார்கள், ஹனுமூன் எங்கு செல்ல போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இன்று நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன அறிவிப்பு வெளியிட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

செருப்புடன் போட்டோஷுட்

செருப்புடன் போட்டோஷுட்

இந்நிலையில் திருமணம் முடிந்த பின் நேற்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்துகொண்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி கோவில் முன் போட்டோ ஷூட் நடத்தினார்கள். திருப்பதியை பொறுத்த வரை மாட வீதிகள், திருக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செருப்பு அணிய அனுமதி கிடையாது. ஆனால் அந்த பகுதியில் நயன்தாரா காலில் செருப்பு அணிந்து வந்து போட்டோஷுட்டில் கலந்து கொண்டது சர்ச்சையானது.

Recommended Video

Nayanthara Wedding | திருப்பதி கல்யாண உற்சவத்தில் Wikki-Nayan *Celebrity |Filmibeat Tamil
விக்னேஷ் சிவனிடம் விசாரணை

விக்னேஷ் சிவனிடம் விசாரணை

இந்த சம்பவம் பற்றிய போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பின. எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் இதுபற்றி விக்னேஷ் சிவனை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர், இது தெரியாமல் நடந்த தவறு. எனவே நடந்த தவறுக்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் வகையில் கடிதம் அல்லது வீடியோ ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வெளியிடுகிறேன் என்று கூறி உள்ளார்.

மன்னிப்பு கடிதம் அனுப்பிய விக்கி

மன்னிப்பு கடிதம் அனுப்பிய விக்கி

இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில்,"திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம். அதன்பின் கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.

தெரியாமல் நடந்த தவறு

தெரியாமல் நடந்த தவறு

இதனால் ஏற்பட்ட பரபரப்பில் செருப்பு அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் செருப்புடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். திருப்பதி மலையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கடந்த ஒரு மாதத்தில் 5 முறை திருப்பதி மலைக்கு இரண்டு பேரும் வந்திருக்கிறோம். பல்வேறு காரணங்களால் திருப்பதி மலையில் எங்கள் திருமணத்தை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X