ஓடறது.. ஓடறது போடறது.. நீந்தறது... வெட்டு வெட்டிய விக்னேஷ் சிவன்.. ஊட்டி வேற விடுறாரு!

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல் படம்.

Recommended Video

பொங்கல் வைத்த Nayanthara, திருமணத்திற்கு தயாராகும் Nayan-Wikki #Kollywood | FilmiBeat Tamil

இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது.

வரும் ஜூன் மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம் திருப்பதியில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெற்றி நாயகி

வெற்றி நாயகி

நடிகை நயன்தாரா கோலிவுட் மட்டுமில்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக காணப்படுகிறார். பல வெற்றிப்படங்களை கொடுத்துவரும் இவர் தற்போது பாலிவுட்டிலும் ஷாருக் உள்ளிட்டவர்களுடன் படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்திய அளவில் தன்னை சிறப்பான நடிகையாக உயர்த்திக் கொண்டுள்ளார் நயன்தாரா.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

சமீபத்தில் இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியானது காத்து வாக்குல ரெண்டு காதல் படம். இந்தப் படத்தில் கண்மணியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் நயன்தாரா. விஜய் சேதுபதியை சமந்தாவும் நயன்தாராவும் காதலிப்பதாக இந்தப் படத்தின் கதை அமைந்திருந்தது. படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்?

விக்னேஷ் சிவனுடன் திருமணம்?

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. திருப்பதியில் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமண ஏற்பாடுகளை பார்வையிட திருப்பதிக்கு சென்றிருந்தனர்.

கோயில்களில் பரிகாரங்கள்

கோயில்களில் பரிகாரங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த கோயில்களுக்கும் விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி சென்று வருகிறது. நேற்றைய தினம் குலதெய்வ கோயிலுக்கு இருவரும் சென்றிருந்தனர். திருமணத்திற்காக பரிகார பூஜை செய்வதற்காக இருவரும் கோயில்களுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

குலதெய்வ கோயிலில் வழிபாடு

குலதெய்வ கோயிலில் வழிபாடு

நேற்றைய தினம் குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து இருவரும் வழிபாடு மேற்கொண்டனர். திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக குலதெய்வ கோயிலில் வழிபாடு மேற்கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்பதால் இவர்களது திருமணம் இந்த செயல் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்

வீடியோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்

இதனிடையே தற்போது புதிய வீடியோ ஒன்றை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மகாபலிபுரம் அருகே மீன் உணவுகளை பரிமாறும் ரெஸ்டாரெண்டில் தாங்கள் சாப்பிடுவதாக அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். அவர் முன்பு ஏராளமான மீன் உணவுகள் காணப்படுகின்றன.

ஊட்டி விடும் விக்னேஷ் சிவன்

ஊட்டி விடும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா இதிலெல்லாம் கலந்துக் கொள்ளாமல் ஓரமாக உட்கார்ந்து எளிமையான உணவை சாப்பிடுவதாக தெரிகிறது. ஆனால் அவரை கட்டாயப்படுத்தி ஆசையுடன் விக்னேஷ் சிவன் அவருக்கு ஊட்டி விடுகிறார். முதலில் மறுக்கும் அவர் தொடர்ந்து அதை வாங்கிக் கொள்கிறார்.

ஏகே62 படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

ஏகே62 படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்

முன்னதாக நயன்தாராவை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து அவரது தோள் மீது கைப் போட்டு பின்னர் ஒரு கவளத்தை எடுத்து அவருக்கு ஊட்டி விடுகிறார் விக்னேஷ் சிவன். காத்து வாக்குல ரெண்டு காதல் வெற்றியடைந்துள்ள நிலையில் அடுத்ததாக அஜித்தின் ஏகே62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X