கோலாகலமான பிறந்த நாள் கொண்டாட்டம்..மகிழ்ச்சியில் நயன்தாரா..வைரல் பிக்ஸ் !

சென்னை : கோலிவுட் சினிமாவில் எவ்வளவு நடிகைகள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரு படி மேலே இருக்கும் நடிகை நயன்தாரா கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்

Recommended Video

Nayanthara Family Surprise Birthday Party | Vignesh Shivan, Celebrity Wishes | Filmibeat Tamil

கிட்டதட்ட 15 வருடங்கள் கோலிவுட் சினிமா துறையில் நீங்காத இடம்பிடித்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த நடிகை நயன்தாரா தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடினார்

தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் அசத்தி வரும் நடிகை நயன்தாரா எல்லாவிதமான சினிமா ரசிகர்களையும் திரும்பிப்பார்க்க வைக்கும் படி கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடித்து வருகிறார்.

கால் தடம்

கால் தடம்

நடிகை நயன்தாரா 2005ஆம் ஆண்டு வெளியான சரத்குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் முதல் படத்திலேயே நல்ல வெற்றியைப் பார்த்த நயன்தாரா அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் வாசு இயக்கிய சந்திரமுகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் அந்த திரைப்படம் பெரும் வெற்றியை அடைந்து நயன்தாராவுக்கு மார்க்கெட்டை உயர்த்தியது என்னதான் திரைப்படத்தில் ஜோதிகா, மாளவிகா போன்ற முன்னணி நடிகைகள் நடித்திருந்தாலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாராவுக்கு தனி மவுசு

மார்க்கெட்டில் முதல் இடம்

மார்க்கெட்டில் முதல் இடம்

கோலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் மார்க்கெட்டில் முதலிடம் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும்போது அவர்கள் எல்லாரையும் கீழே தள்ளி தனது நடிப்பால் சரசரவென மேலே உயர்ந்த நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நயன்தாரா வரிசையாக வெற்றி படங்களை கொடுக்க போட்டியின்றி மார்க்கெட்டில் மேலே சென்றார்

லேடி சூப்பர் ஸ்டார்

லேடி சூப்பர் ஸ்டார்

தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் வரிசையாக வெற்றி படங்களை தந்து வந்த நயன்தாரா தமிழிலும் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைய தளபதி விஜய், தல அஜித் சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் வரை நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயர் பெற்றார் நடிகை நயன்தாரா

ரசிகர்களுக்கு விருந்து

ரசிகர்களுக்கு விருந்து

கோலிவுட்டில் பல நடிகைகள் ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொள்ள கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கியபோது நயன்தாராவும் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார் கவர்ச்சியில் கொடி கட்டு வந்த நயன்தாரா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்தார்

விக்னேஷ் சிவனுடன்

விக்னேஷ் சிவனுடன்

என்னதான் சினிமா துறையில் கொடி கட்டி பறந்தாலும் தனது சொந்த வாழ்வில் பலரும் விமர்சிக்கும் படி பல செயல்களை செய்து வருகிறார். சினிமா துறையில் வந்த போது நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா சிறிது நாளிலேயே அந்த லக் பிரேக் அப் ஆனாது. பிறகு இயக்குனர் பிரபுதேவாவை காதலித்த நயன்தாரா அவர் பெயரை பச்சைகுத்தும் அளவுக்கு இவர்கள் காதல் சென்றது பின் ரு சில நிகழ்வுகளால் அந்த காதலையும் முறித்துக் கொண்டார். அதன் பிறகு தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார் அவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டியை சமூக வலைதளங்கள் பார்த்து வருகிறது.

பலர் வாழ்த்து

பலர் வாழ்த்து

இந்நிலையில நேற்று தனது 36வது பிறந்த நாளை தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினார். அந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நெட்டிசன்கள் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X