எனக்கு நீ.. உனக்கு நான்.. நயன்தாராவை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த விக்கி!

சென்னை : நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து படப்பிடிப்பு இருப்பதால் தற்போது சிம்பிளாக தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு, தமிழ் திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது அவரின் இரண்டாவது படமான நானும் ரவுடி தான்.

அவரது சினிமா கெரியருக்கு மட்டுமின்றி அவரது வாழ்க்கையிலும் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் நடிகை நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் விக்கி.

காதல் மலர்ந்தது

காதல் மலர்ந்தது

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் காதலிக்கத் தொடங்கிய இவர்கள் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் காதலித்து வந்தனர். கோவில், சினிமா நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி என எதுவானாலும் இவர்கள் இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு வருவதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த நட்சத்திர ஜோடியை பார்த்து பலரும் எப்போ கல்யாணம் என கேட்டு வந்த நிலையில், நெற்றிக்கண் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நிச்சயம் முடிந்துவிட்டதாக விரைவில் திருமணம் என கூறியிருந்தார் நயன்தாரா.

திருமண பந்தத்தில் இணைந்தனர்

திருமண பந்தத்தில் இணைந்தனர்

இதையடுத்து, கடந்த ஜூன் 9ந் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி செய்தனர். அவர்கள் திருப்பதி சென்ற புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

ஸ்டார் ஹோட்டலில் விருந்து

ஸ்டார் ஹோட்டலில் விருந்து

நயன்தாராவின் அம்மா திருமணத்திற்கு வராததால், அம்மாவிடம் ஆசிவாங்க கேரளா சென்றார். மேலும் சொந்த ஊரில் உள்ள கோவில்கள் சிலவற்றிற்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொச்சியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

தாய்லாந்தில் ஹனிமூன்

தாய்லாந்தில் ஹனிமூன்

கேரளாவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் தற்போது தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி இருவரும் ஜோடியாக ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். அங்கு எடுத்த புகைப்படங்களையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தினந்தோறும் வெளியிட்டு வருகிறார்.

செம்ம கிளாஸ்

செம்ம கிளாஸ்

தற்போது விக்னேஷ் சிவன் புது ஹனிமூன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா வெள்ளை ஷர்ட் மற்றும் ப்ளு ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற ஷூ அணிந்து செம்ம கிளாஸாக இருக்கிறார். மேலும், இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக அவள் என்னை போட்டோ எடுத்த போது நான் அவளைக் கிளிக் செய்தேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X