Don't Miss!
- News
உச்சநீதிமன்ற உத்தரவால் ஈபிஎஸ் புதுதிட்டம்.. ஈரோடு கிழக்கு வேட்பாளர் தேர்வுக்கு மாற்றுவழி! என்னவாம்?
- Lifestyle
இந்த 5 காரணங்களுக்காகதான் மக்கள் மோசமான திருமண வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்களாம்...!
- Automobiles
திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Finance
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் விவகாரம்.. நிர்மலா சீதாராமன் சொல்வதைக் கேட்டீங்களா..!!
- Sports
இந்தியா மீது குவியும் பிட்ச் குற்றச்சாட்டுக்கள்.. அஸ்வின் தரமான பதிலடி.. அட இது நல்லா இருக்கே!
- Technology
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எவ்வளவு பிசியாக இருந்தாலும் இதை மட்டும் விட மாட்டேங்கறாரு விக்னேஷ் சிவன்.. என்ன தெரியுமா!
சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர்.
தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில், அவரவர் வேலைகளில் பிசியாகியுள்ளனர். ஜவான் படத்தின் சூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்றுள்ளார்.
கடந்த சில தினங்களாக தொடர்ந்து தங்களின் திருமண புகைப்படங்களை வெளியிட்டுவந்த விக்னேஷ் சிவன் தற்போது தனது ரூட்டை மாற்றியுள்ளார்.
ராஜா
ராணி
கனெக்ஷன்
இருக்கே..
நயன்தாரா
75வது
படத்தை
இயக்கப்
போறது
யார்
தெரியுமா?

நயன்தாரா -விக்னேஷ் சிவன்
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடிதான் என்ற படத்தில்தான் இவர்களது காதல் பயணம் துவங்கியது. தொடர்ந்து ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்துக் கொண்டே தங்களது காதலையும் இவர்கள் தொடர்ந்தனர். கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்கில் தொடர்ந்து இடம்பெற்றனர்.

திருமணம் செய்த ஜோடி
இதனிடையே காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசை தொடர்ந்து தங்களது திருமணத்தையும் அறிவித்தனர். சில தினங்களிலேயே அதாவது கடந்த மாதம் 9ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்தது. ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, இயக்குநர்கள் அட்லி, கௌதம் மேனன், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றது.

பிரபலங்கள் வாழ்த்து
மிகுந்த பாதுகாப்புடன் இவர்களது திருமணம் நடத்தப்பட்டது. செல்போன்கள்கூட அனுமதிக்கப்படவில்லை. மாறாக திருமணத்திற்கு வந்தவர்களுக்கு சிறப்பான பரிசுகளை அளிக்கவும் இவர்கள் தவறவில்லை. இதேபோல இவர்களது திருமணத்திற்கு ரஜினி உள்ளிட்டவர்கள் விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர்.

ஜவான் சூட்டிங்
திருமணத்தை தொடர்ந்து கொச்சியில் தன்னுடைய அம்மா வீட்டில் சில தினங்கள், தாய்லாந்தில் ஹனிமூன் என இந்த ஜோடி அடுத்தடுத்த ட்ரிப் அடித்தது. தொடர்ந்து நாடு திரும்பிய நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி அவரவர் வேலைகளில் பிசியாகியுள்ளனர். ஷாருக்கானுடன் ஜவான் படத்தின் சூட்டிங்கில் நயன்தாரா பங்கேற்றுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
இதனிடையே சென்னையில் நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்கவிழா கொண்டாட்டங்களை விக்னேஷ் சிவன் எடுத்து நடத்தவுள்ளார். இதையொட்டி சிறப்பான வீடியோ ஒன்றும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவில் முதல்வர் முக ஸ்டாலின், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

புகைப்படங்கள் பகிர்வு
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தன்னுடைய திருமணப் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனிடையே, நயன்தாராவுடன் தான் இருக்கும் ரொமாண்டிக் புகைப்படங்களை பகிரவும் அவர் மறப்பதில்லை.

ரொமாண்டிக் புகைப்படங்கள்
தேனிலவின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்ட அவர், தற்போது மும்பை விசிட்டின்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Recommended Video

தொடர்ந்து புகைப்படங்கள் பதிவு
அஜித்தின் ஏகே 62 பட வேலைகள் மற்றும் தற்போது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழா கொண்டாட்டங்களை எடுத்து நடத்துவது என மிகவும் பிசியாக காணப்படுகிறார் விக்னேஷ் சிவன். ஆனாலும் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட இத்தகைய புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை அவர் மறப்பதில்லை.