காத்து வாக்குல ஒரு காதல்... முதல் முறையாக சொல்வதை போல் காதல் செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா
சென்னை : கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் முதல் முறை காதல் செய்வதை போல் காதலர் தினத்தை கொண்டாடி உள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது.
கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடிகளில் டைரக்டர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ஒருவர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் படத்தில் சேர்ந்து பணியாற்றிய போது இவருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினர்.

வெளிநாடுகளில் கொண்டாட்டம்
புத்தாண்டு, பிறந்தநாள், காதலர் தினம் என ஒவ்வொரு ஸ்பெஷலான நாளுக்கும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாடுவதை இந்த ஜோடி வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி சமீபத்தில் துபாயில் புத்தாண்டை கொண்டாடினர். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டனர். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்தனர்.

நயன்தாரா திருமணம் எப்போது
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் எப்போது என்பது தான் பல நாட்களாக கோலிவுட்டில் பேச்சாக இருந்து வருகிறது. ஆனால் கையில் அணிந்திருந்த மோதிரம் பற்றி கேட்ட போது, தங்களுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவே கூறி உள்ளார். 2022 ம் ஆண்டிற்குள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் காத்து வாக்குல ரெண்டு காதல்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது. ஒரே நாளில் ஒரு கோடி பார்வைகளை பெற்றது. விரைவில் ரிலீஸ் தேதியை விக்னேஷ் சிவன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக காதல்
இந்நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட வீடியோ மற்றும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவனை, நயன்தாரா கட்டிப்பிடித்து, கொத்தாக பூக்களை கொடுத்து வாழ்த்து கூறுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், ஒவ்வொரு முறையும் அவள் பூக்கொடுக்கும் போது முதல் முறை காதலிப்பதை போல் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

காத்து வாக்குல ஒரு காதல்
காத்து வாக்குல ஒரு காதல் என்ற கேப்ஷனுடன் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபிக்களையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











