கல்யாணம் முடிந்து ஒரு மாசமாச்சு..அன்சீன் அசத்தல் போட்டோக்களை வெளியிட்டு கொண்டாடிய விக்னேஷ் சிவன்

சென்னை : விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் பற்றிய பேச்சுக்கள் தான் கடந்த சில வாரங்களாக ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வந்தது. அதற்கு பிறகு விக்ரம் பட வசூல் சாதனை, பொன்னியின் செல்வன் ஆகியவற்றில் ரசிகர்கள் கவனத்தை செலுத்தினர்.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு ஜுன் 9 ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பலரும் இவர்களின் திருமணம் பற்றிய தகவல்களை அறிய அதிக ஆர்வம் காட்டினர்.

மாமல்லபுரத்தில் மிக பிரம்மாண்டமாக, அதே சமயம் பல கட்டுப்பாடுகளுடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் ரஜினி, விஜய், ஷாருக்கான், மணிரத்னம், அட்லி என பல விஐபி.,க்கள் கலந்து கொண்டனர்.

போட்டோ, வீடியோவிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

போட்டோ, வீடியோவிற்கு காத்திருக்கும் ரசிகர்கள்

ஆனால் மீடியாக்கள் யாருக்கும் அனுதியில்லை என சொல்லப்பட்டதால் விஐபி.,க்கள் மணமக்களை வாழ்த்திய போட்டோக்களோ, வீடியோக்களோ வெளியாகவில்லை. திருமணத்தின் ஒரு சில போட்டோக்களை மட்டுமே விக்னேஷ் சிவன் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டார். இந்த போட்டோக்கள் செம வைரலாகின.

நெட்ஃபிளிக்ஸ் வெளிடவில்லையே

நெட்ஃபிளிக்ஸ் வெளிடவில்லையே

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. இதற்காக ரு.25 கோடிகளை நெட்ஃபிளிக்ஸ் வழங்கியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த திருமண வீடியோக்களை எப்போது நெட்ஃபிளிக்ஸ் வெளியிட போகிறது என தெரியவில்லை. இதுவரை நெட்ஃபிளிக்ஸ் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகினர்.

வைரலான போட்டோக்கள்

வைரலான போட்டோக்கள்

இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தாங்கள் திருப்பதி சென்ற போட்டோக்கள், கேரளாவில் கோயிலில் வழிபாடு செய்தது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது, கொச்சியில் ஊர் சுற்றியது போன்ற பல போட்டோக்களை விக்கி அவ்வப்போது வெளியிட்டார். அந்த போட்டோக்கள் செம வைரலாகின. இதைத் தொடர்ந்து தாய்லாந்திற்கு ஹனிமுன் சென்ற ரொமான்டிக் போட்டோக்களையும் விக்கி வெளியிட்டு அசத்தினார். இந்த போட்டோக்களும் லைக்குகளை அள்ளின.

விக்கி - நயன் பேச்சாத்தான் இருக்கு

விக்கி - நயன் பேச்சாத்தான் இருக்கு

கல்யாணம், ஹனிமுன் போட்டோக்கள் தான் வைரலாகின என பார்த்தால், திருமணத்திற்கு பிறகு நயன்தாரா ஷுட்டிங் சென்ற வீடியோக்கள், போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ரொமான்டிக் போட்டோக்கள் என அனைத்தும் இவர்கள் பற்றிய பேச்சுக்களை லைவிலேயே வைத்துள்ளன.

ஒரு மாதமானதையும் இப்படி கொண்டாடிருக்கார்

ஒரு மாதமானதையும் இப்படி கொண்டாடிருக்கார்

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு இன்றுடன் திருமணமாகி ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. இதை கொண்டாடும் விதமாக தங்களின் திருமணத்தில் ரஜினி, மணிரத்னம், ஷாருக்கான், அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தியது, பரிசுகள் வழங்கியது என பல போட்டோக்களை வெளியிட்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X