யாருடா இவன் நமக்கே டஃப் கொடுப்பான் போல.. நயனுக்காக நெட்ஃபிளிக்ஸுடன் போட்டி போடும் விக்கி!
சென்னை: நயன்தாராவுக்காக நெட்ஃபிளிக்ஸுடன் இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டி போடுவதாக ஷேர் செய்துள்ள மீம் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம்.
திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வருவதாகவும் நீண்ட நாட்களாக தகவல் பரவி வருகிறது

நெருக்கமான போட்டோஸ்
இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகின்றனர். அந்த போட்டோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாயின.

லாக்டவுன் நேரத்திலும்..
அதனை பார்த்த ரசிகர்கள், அது என்ன சிசிடிவி போட்டோவா என கேட்டனர். இந்த ஆண்டு முழுக்க கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் நடைபெறாவிட்டாலும் நடிகை நயன்தாரா விக்கியுடன் இருந்த போட்டோக்கள் அடிக்கடி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.

கோவா டூர் போட்டோஸ்
குறிப்பாக ஓணம் செலிபிரேஷன், கோவா டூர் என நயன்தாரா மற்றும் விக்கியின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது இணைய பக்கத்தில் நயனுடன் இருக்கும் போட்டோக்களை ஷேர் செய்து வந்தார்.

தங்கமே..
இந்நிலையில் நேற்று முன் தினம் நடிகை நயன்தாரா, தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தங்கமே என பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் விக்னேஷ் சிவன். மேலும் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களையும் ஷேர் செய்தார் விக்னேஷ் சிவன்.
Recommended Video

நெட்பிளிக்ஸ் வாழ்த்து
இந்நிலையில் விக்னேஷ சிவன் ஷேர் செய்துள்ள மீம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது நெட்பிளிக்ஸில் நயன்தாராவிற்கு நீங்கள் நயனாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு எப்போதும் 10க்கு 10 என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

நமக்கே டஃப் கொடுப்பான் போல
இதனை பார்த்த நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் பயில்வானுடன் மோதும் மீம்ஸை போட்டு, யாருடா இவங்க நமக்கே டஃப் கொடுப்பான் போல எனகலாய்த்து உள்ளார். தற்போது இந்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











