ரஜினிகாந்த்தை சந்தித்து அழுத விக்னேஷ் சிவன்.. அய்யய்யோ இப்படியும் நடந்திருக்கா?.. அப்படி என்ன ஆச்சு?

சென்னை: நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட விக்னேஷ் சிவன் இப்போது எல் ஐகே என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் இப்படம் ரிலீஸாகவிருக்கிறது. எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் ரஜினிகாந்த்தை சந்தித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமாகி நானும் ரௌடிதான் படத்தின் மூலம் அடையாளம் பெற்றவர் விக்னேஷ் சிவன். அந்தப் படத்தை இயக்கியபோதுதான் நடிகை நயன்தாராவை காதலிக்க தொடங்கினார். இரண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

இப்போதைய படம்: அஜித் படத்தை இயக்குவதாக இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறினார். இப்போது பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து எல்ஐகே என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அடுத்த மாதம் படம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுத்திட வேண்டுமென்று உழைத்திருக்கிறார்.

Vignesh Shivan shares a photo he took when he met Rajinikanth
Photo Credit:

ரஜினியின் ரசிகர்: விக்னேஷ் சிவன் ரஜினிகாந்த்தின் தீவிரமான ரசிகர் ஆவார். அதனை அவர் பல மேடைகளில் வெளிப்படுத்தியும் இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தில் தந்தை, மகன் பற்றிய பாடலையும் விக்னேஷ்தான் எழுதியிருந்தார். அந்தப் பாடலை எழுதியதில் தனக்கு மிகப்பெரிய திருப்தி என அடிக்கடி அவர் சொல்வதுண்டு. இந்நிலையில் ரஜினியை அவர் முதன்முதலில் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

அழுத விக்னேஷ் சிவன்: ரஜினியை சந்தித்தபோது எமோஷனலில் கண்ணீர் விட்டு அழுதும் இருக்கிறார் விக்கி. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "உங்களை நான் முதன்முறையாக பார்த்தபோது கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்டஸ்ட்ரியில் இருக்கும் அனைவருக்கும் உங்களை பற்றி நன்றாக தெரியும். கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கப்போகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கூலி ரிலீஸ்: முன்னதாக கோலிவுட் எங்கும் கூலி ஃபீவர்தான் அடித்துக்கொண்டிருக்கிறது. லோகேஷும், ரஜினியும் இணைந்திருப்பதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் படம் திரையிடப்பட்டுவருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனங்களையே இதுவரை கொடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X